• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நேச்சுரல் ஸ்டார்’ நானி – சைலேஷ் கோலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவாகும் ‘HIT : தி தேர்ட் கேஸ் ‘ எனும் படத்தின் டீசர் -‘ சர்க்கார்’ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்’ வெளியீடு

by Tamil2daynews
February 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நேச்சுரல் ஸ்டார்’ நானி – சைலேஷ்  கோலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவாகும் ‘HIT : தி தேர்ட் கேஸ் ‘ எனும் படத்தின் டீசர் -‘ சர்க்கார்’ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்’ வெளியீடு

 

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘ பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான யுனாானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ‘சர்க்காரின் லத்தி’ எனும் பெயரில் டீசர் ஒன்று.. நானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

கதைக்களம் – ஒரே மாதிரியாக நிகழும் கொலை குற்ற சம்பவங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு காவல்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்த போதிலும்.. அவர்களால் இந்த கொலை வழக்கை தீர்க்கவோ அல்லது குற்றவாளியை பிடிக்கவோ முடியவில்லை. இதன் இறுதி முயற்சியாக.. அவர்கள் அர்ஜுன் சர்க்காரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்கள். அர்ஜுன் சர்க்கார் என்பது குற்றவாளிகளின் முதுகெலும்பை நடுநடுங்க வைக்கும் பெயர்.
அர்ஜுன் சர்க்காராக நானியின் சித்தரிப்பு கொடூரமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் வடிகட்ட இயலாத தீவிரத்தை கொண்டு வருகிறார். அவர் தவிர்க்க முடியாதவர் போலவே பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்குகிறார். அவரது மிரட்டும் சைகைகள் முதல் வெடிக்கும் கோபம் வரை நாணியின் அர்ஜுன் சர்க்கார் ஆக்ரோசத்தின் சூறாவளி.

ஒரு குற்றவாளியின் வயிற்றில் கத்தியை குத்தி, அதை மேலே நோக்கி உயர்த்தும் போது… கொடூரமான காட்சியில் ரத்தம் கூரையில் தெறிக்கிறது. இந்த தருணம்- கதாபாத்திரத்தின் அடக்க முடியாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு சிலிர்க்க வைக்கும் சான்றாகும்.

இயக்குநர் சைலேஷ் கோலானு ஒப்பற்ற கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியாக விவரிப்பதால் ..’ HIT தி தேர்ட் கேஸ்’  படத்தின் மூன்றாவது பாகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார். நானி தனது ஆற்றல் வாய்ந்த நடிப்பால் கதையை மேம்படுத்துவதுடன் அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் நடிப்பால் உணர்த்துகிறார். வழக்கமான பிம்பங்களை அந்த கதாபாத்திரம் உடைக்கிறது. நானியின் மாற்றமும் ரசிக்கத்தக்கது மற்றும் மறக்க இயலாதது.

கிரைம் வித் ஆக்சன் திரில்லரான இந்த திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருடன் பின்னணி இசை மூலம் பதற்றத்தை அதிகரிக்க மிக்கி ஜே. மேயர் இணைந்திருக்கிறார். வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி ஆகியரோல் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்தின் தயாரிப்பின் தரம் சர்வதேச அளவிலானது. படத்தின் படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் கையாள, தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நாகேந்திர தங்கலா கவனிக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் ‘HIT : தி தேர்ட் கேஸ்’ – 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

துடிப்பான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதைக்களம் – நானியின் அற்புதமான நடிப்பு – ஆகியவை இணைந்து ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம்… கிரைம் வித் ஆக்சன் திரில்லர் படங்களின் எல்லையை மறு வரையறை செய்வதாகவும், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது.

நடிகர்கள் :

நானி , ஸ்ரீநிதி ஷெட்டிதொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கோலானு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால் போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே. மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
நிர்வாக தயாரிப்பு : எஸ் வெங்கட ரத்தினம் (வெங்கட் )
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

https://www.youtube.com/watch?v=U7ZuwOGLTlo
Previous Post

யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு வரலாறு படைக்கிறது

Next Post

வெளியானது ‘ ஹரி ஹர வீர மல்லு ‘ படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் !

Next Post

வெளியானது ' ஹரி ஹர வீர மல்லு ' படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் !

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.