“ராக்கெட்ரி” விமர்சனம்.
ஒருவர் படம் இயக்குவதும் ,அதே படத்தில் நடிப்பதும் என்ற இரண்டு விஷயமே முதல்ல ஒரு பெரிய ரிஸ்க்கான விஷயம் தான்.
அப்படி இருந்து இந்த கதையை இயக்குவேன் ரிஸ்க் தான். இந்த கதையை கையில் எடுத்துக்கிட்டு இந்த கதைக்காக விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்திருக்கும் மாதவன் அந்த கேரக்டருக்காக தன் உடலை வறுத்து எடுத்திருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகராக திகழும் நடிகர் மாதவன் நடிகராக மட்டுமல்லாமல் தற்போது முதல் முறை இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக மாதவன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி.


ஆனால் நிஜ இஸ்ரோல் விஞ்ஞானியான நம்பி நாராயணன் சூர்யா கேட்கும் கேள்வியில் இருந்து அளிக்கும் பதில் நான் நிரபராதி என்று சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பாகிவிட்டது. எனக்கு சந்தோசம் அல்ல ,நான் நிரபராதி ஆனால் நிச்சயமாக குற்றவாளி என்று ஒருவன் இருப்பான் அவன் யார் இம்மாதிரி கைதட்ட வைக்கும் வசனங்களும் சூப்பர்.
நாட்டுக்கு பெருமை சேர்க்கும் “பத்ம விபூசஷன்” இந்திய அரசால் வாழங்கப்பட்ட இஸ்ரேல் விஞ்ஞானி இறுதியில் ஒருபுறம் டூவீலரில் செல்ல, சதி செய்து அவரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வில்லன்களோ “ரோல்ஸ் ராய்ஸ்” காரில் செல்வது நெஞ்சை பத,பதக்க வைக்கும் காட்சி இன்றைய நாட்டின் நிலைமை அதுவே.

“உண்மை ஒருநாள் வெல்லும்”
“உலகம் உன் பேர் சொல்லும்”
ஒரு கோடி முதலீட்டில் இரண்டு கோடி லாபம்வேண்டும் ,அல்லது 10 கோடி முதலீட்டில் 20 கோடி லாபம் வேண்டும் என்கிற கேவலமான முறையில் படம் எடுத்து கொண்டிருக்கும் இந்த உலகில் மாதவன் போன்ற நல்ல மனங்கள் இம்மாதிரியான கதைகளை தெரியாத மக்களுக்கு நன்கு பரிச்சியமாக படமாக்கி காட்டியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த “ராக்கெட்ரி” திரைப்படம் மக்கள் மனதில் இடம்பிடிப்பது நிச்சியம்
நேர்மை என்ற உன்னத சொல்லால் உலகில் நம்பிக்கையோடு வாழ்ந்து வரும் நம்பி நாராயணனுக்கு
ஒரு சல்யூட் , ஜெய்ஹிந்த்.
விமர்சகர் – சரண்