• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
July 19, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

 

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன. இந்த நேரத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது, “ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடம் இருந்து இவ்வளவு அன்பையும் வரவேற்பையும் ‘விடுதலை’ படக்குழு பெறுவது நெகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை1’ எங்கள் எதிர்பார்ப்புகளை விடவும் அதிக வரவேற்பு பெற்றது. இந்தப் படம் வணிகம் மற்றும் பேரலல் சினிமாவிற்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் மூலம் எதிர்கால இயக்குநர்களுக்கு ஒரு ப்ளூப்ரிண்ட்டாக இந்தப் படம் மாறியுள்ளது என்பதை தொழில்துறை மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இருந்து கேட்பது எங்களுக்கு உற்சாகமாக உள்ளது.
‘விடுதலை 1’ மற்றும் ‘கருடன்’ படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரியின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்களோடு ‘விடுதலை2’ படத்தை ரசிகர்களுக்கு சிறந்த முறையில் வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த இரண்டாம் பாகத்தினை வெற்றிமாறன் இன்னும் செழுமைப்படுத்தி வருகிறார். இசைஞானி இளையராஜா சாரின் மேஜிக்கல் இசை இந்தக் கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் படத்தின் மதிப்பை தங்கள் நடிப்பின் மூலம்  உயர்த்தி இருக்கிறார்கள். இவர்களுடன், ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் மற்றும் பல நம்பிக்கைக்குரியவர்கள் நடித்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, மஞ்சு வாரியரின் நடிப்பு இந்த படத்தில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படும். நடிகர் கிஷோரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தீவிரமானதாக இருக்கும்” என்றார்.

ரெட் ஜெயண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர்: வெற்றிமாறன்,
இசை: இளையராஜா,
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
படத்தொகுப்பு: ராமர்,
ஆடை வடிவமைப்பாளர்: உத்ரா மேனன்,
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு:  டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ்: ஆர். ஹரிஹரசுதன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர்: வி. மணிகண்டன்,
தயாரிப்பாளர்: எல்ரெட் குமார்

Previous Post

விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!

Next Post

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

Next Post
தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.