• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா திரைப்படம், “நாகபந்தம்” !!

by Tamil2daynews
April 10, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா திரைப்படம்,  “நாகபந்தம்” !!

 

கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் & விநியோகஸ்தர் அபிஷேக் நாமாவுக்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. தற்போது இவர் சினிமா அனுபவத்தை மாற்றி அமைக்கும் ஒரு அற்புதமான காவியத்தைத்  தயாரிக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் “புரொடக்சன் 9” ஆக உருவாகும் இப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் இணைந்து  தயாரிக்கிறார்.

இயக்குநராக டெவில் மூலம் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தவுள்ளார். அபிஷேக் நாமா, ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். தேவன்ஷ் நாமா இப்படத்தை வழங்குகிறார், தேவ் பாபு காந்தி (புஜ்ஜி) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

உகாதியின் புனிதமான திருநாளில், அபிஷேக் பிக்சர்ஸ் அவர்களின் பிரம்மாண்டமான முயற்சியின் தலைப்பை ஒரு அற்புதமான வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்திற்கு நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது – . வியக்க வைக்கும் அறிமுக வீடியோ நம்மை மயக்கும் ஒரு மந்திர உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது, மேலும் வசீகரிக்கும் ஒலிப்பதிவு மற்றும் கண்கவர் காட்சிகள் என அத்தனை அம்சங்களும் வியக்கவைக்கிறது.  இதன்  விஎஃப்எக்ஸ் பணிகள் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் புகழ் அவினாஷ் நடிப்பில்,  மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இது உண்மையில்  நமது ஆர்வத்தைத் தூண்டுவதோடு விஷ்ணுவின் புதையலுக்கான பரபரப்பான தேடலையும் காட்டுகிறது.  இயக்குநர் அபிஷேக் நாமா மற்றும் தயாரிப்பாளர் மதுசூதன் ராவ் தலைமையில், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பணியாற்றுவதால், இந்த மிகப்பிரம்மாண்ட திரைப்படம், கண்டிப்பாக மாயாஜாலம், மர்மம் மற்றும் சாகச உலகில் மூழ்கும் அட்டகாசமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் S லென்ஸ்மேனாகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.

முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு:

பேனர்: அபிஷேக் பிக்சர்ஸ்
இணை தயாரிப்பு : தண்டர் ஸ்டுடியோஸ்
வழங்குபவர்- தேவன்ஷ் நாமா
கதை, திரைக்கதை, & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்: மதுசூதன் ராவ்
ஒளிப்பதிவு : சௌந்தர் ராஜன் S
இசை: அபே
இணை தயாரிப்பாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி)
CEO : வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிகுடிகர்
வசனங்கள் : ஸ்ரீகாந்த் விசா
எடிட்டர் : சந்தோஷ் காமிரெட்டி
நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்
ஆக்சன் : வெங்கட்
டால்பி அட்மாஸ் மிக்சிங்க்  : E.ராதாகிருஷ்ணா டி.எஃப். தொழில்நுட்பம்
சிறப்பு விளைவுகள்: J.R.எத்திராஜ்
திரைக்கதை உருவாக்கம்: ராஜீவ் N கிருஷ்ணா
VFX : தண்டர் ஸ்டுடியோஸ்
விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார்

Previous Post

“என்னால் காத்திருக்க முடியவில்லை” ; பையா ரீ ரிலீஸ் குறித்து நடிகர் கார்த்தி, நடிகை தமன்னா உற்சாகம்

Next Post

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’

Next Post

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் 'கோடீ'

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.