• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் லெசோ” ( Hai Lesso) திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

by Tamil2daynews
October 2, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ்  இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் லெசோ” ( Hai Lesso) திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை  க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் Sudheer Anand (சுடிகாளி சுதீர்) (Sudigaali Sudheer), தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக  அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஹெய் லெசோ”  (Hai Lesso) எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன்  வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.
டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும்,  தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu)  திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.
நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda)  முக்கிய வேடத்திலும்  நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து  நடிக்கின்றனர்.

இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.
“ஹெய் லெசோ”   படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
இசை: அனுதீப் தேவ்
ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
நடன அமைப்பு: விஜய் போலாகி
ஸ்டண்ட்: ப்ருத்வி
லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
பிரசாரக் கலை: தானி ஆலே
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Previous Post

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

மரியா - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.