• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

by Tamil2daynews
January 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

 

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கேக்கணும் குருவே” பாடல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படியான ஒரு  உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.

மெகா சூர்யா புரொடக்‌ஷன் தயாரிப்பின் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவான இந்த ஹரி ஹர வீரமல்லு படம், முகலாயப்பேர்ரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும்  நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும்  நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும்  எதிர்த்து ஓடவிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த  ஹரி ஹர வீரமல்லு.

ஹரி ஹர வீரமல்லு படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில், இயற்கை சூழ்ந்த அடர் காடுகளின் பின்னியில், “கேக்கணும் குருவே”  என்ற இந்த தத்துவப்பாடலானது அமைக்க்ப்பட்டிருக்கிறது, தெலுங்கு சினிமாவின் முக்கிய ஆளுமையான “பவர் ஸ்டார்” பவன் கல்யாண், தனது வீரர்களுடன் சேர்ந்து,  இரவு நேரத்தில் ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கி, அங்கு ஒரு வலிமையான சவாலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உனர்ச்சிக் கொந்தளிப்புகளின் இடையே , வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும விதமாக இந்த ஆத்மார்த்தமான பாடலான “கேக்கணும் குருவே” பாடல் இடம்பெற்றுள்ளது.

பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய முத்தாய்ப்பான பாடல் வரிகளின் தமிழ்ப் பதிப்பில், தத்துவார்த்தத கருத்துகள் கூட அழகியலாக மாறியுள்ளன. பாடலின் தீம் மற்றும் அது சொல்ல வரும் கருத்தினால் வெகுவாக ஈர்க்கப்பட்ட  நடிகர் பவன் கல்யாண், தனது சொந்தக்குரலிலேயே தெலுங்கு பதிப்பில் பாடியுள்ளார். மேலும் மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது, பவன் கல்யாணின் குரலில் உள்ள தனித்தன்மையானது, உலகளாவிய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இசையமைப்பாளர் M.M.கீரவாணியின் இசையால் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது, நம்மை புரட்சித்தலைவர் MGR ன் தத்துவப்பாடல்களை நினைவூட்டும்.

இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர  நடிகர்கள் உள்ளனர். மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும், தோட்ட தரணியின் Production வடிவமைப்பும், ஹரி ஹர வீரமல்லு  படத்தை ரசிகர்களுக்கு ஒரு Visual Treatஆக காட்டும் என்பது உறுதி.

“கேக்கணும் குருவே” என்பது வெறும் பாடல் அல்ல; இது தத்துவ உள்நோக்கம், சாகசம் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை பறை சாற்றும் ஒரு பெருமிதம். ஹரி ஹர வீரமல்லுவின் பிரமாண்டமான கதையை முழுமையாக்கும் அதே வேளையில் பாடல்களும் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

ஹரி ஹர வீரமல்லுவின் “கேக்கணும் குருவே” பாடல் ஜனவரி 17, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த தலைசிறந்த படைப்பை வழங்குவதில்  பெருமகிழ்ச்சியடைந்துள்ள படக்குழுவினர் அதே வேளையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இயக்கம்: ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி
தயாரிப்பு: மேகா சூர்யா தயாரிப்பில் தயாகர் ராவ்
வழங்குபவர்: ஏ.எம். ரத்னம்
இசை: எம்.எம். கீரவாணி
பாடல் வரிகள்: பா விஜய்
பாடியவர்கள்: பவன் கல்யாண் (தெலுங்கு)

Previous Post

வசூல்ராஜா வான சுந்தர் சி யின் “மதகஜராஜா”!

Next Post

நடிகர் ஜான் கொக்கேன் பல மொழிகளில் அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் பல்வேறு பெரிய வெளியீடுகள் மற்றும் உற்சாகமான படவரிசைகளுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறார்!

Next Post

நடிகர் ஜான் கொக்கேன் பல மொழிகளில் அதிகபட்ச எதிர்பார்ப்புகளுடன் பல்வேறு பெரிய வெளியீடுகள் மற்றும் உற்சாகமான படவரிசைகளுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறார்!

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.