“பெஸ்டி” விமர்சனம்
பழைய காலத்து பழி வாங்குற கதை தான். இருந்தாலும் ரீசண்டா “மாநாடு” படத்த இயக்குநர் பார்த்துவரும் பாரு போல
எடுத்த சீனையே திரும்ப திரும்ப இயக்குனர் எடுத்திருக்கிறார்.அவரோட மெனக்கடலுக்கும் திரைக்கதைக்கு ஒரு வாழ்த்து
அசோக்கும், யாஷிகாவும் டேட்டிங் செய்வதற்காக ஃபார்ம் ஹவுஸுக்குப் போய்த் தங்குகிறார்கள். அங்கே அவர்களுக்கு கூட்டாகவும், பின் தனித்தனியாகவும் ஏற்படும் திகில் அனுபவங்களே கதை.
புதிய மொந்தையில் பழைய கள் போல, சற்றே வித்யாசமான ட்ரீட்மெண்ட்டில் பழைய பேய் கதை. Conjuring படம் நினைவுக்கு வந்து போகிறது.

டைரக்டர் ரங்கா வுக்கு இது இரண்டாவது படம். தியேட்டருக்கு வரும் ரசிகர்களில் இளசுகளின் கூட்டம் அதிகம் என்ற புரிதலுடன் அவர்களைக் குறிவைத்து இந்த இளமை ததும்பும் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். படத்தில் கிளாமர் வழிந்தோடுகிறது. எல்லா காட்சிகளிலும் யாஷிகா தொடைகளைக் காட்டுவது கலெக்ஷன் கல்லா கட்டுவதற்கு உதவும். அதேசமயம், முகம் சுளிக்கும்படியான விரசக் காட்சிகள் எங்கும் இல்லை!
லவ்வர் பாய் கதாபாத்திரம் அசோக் குமாருக்கு என்றே அளவெடுத்துத் தைத்தாற் போல கச்சிதமாய்ப் பொருந்துகிறது. காதல் காட்சிகள் ஆகட்டும், திகில் காட்சிகள் ஆகட்டும்… எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிராத இயல்பான நடிப்பு! இப்படிப்பட்டவர் ஏன் இன்னும் முன்னணி ஹீரோவாகப் பிரகாசிக்கவில்லை என்பது வியப்பு!

ஆனந்தின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியான ரம்யம். த்ரில்லர் படத்துக்கு ஏற்ப டெம்போவைக் கூட்டும் இசை.
படத்தில் அசோக்கின் நடிப்புக்கு அடுத்தபடி எனக்கு மிகவும் பிடித்தது மாறனின் நகைச்சுவைக் காட்சிகள் வடிவேலுவுக்கு அடுத்து காமெடி நடிகர்கள் என்ற பெயரில் சந்தானம், சூரி என பலர் வந்து போனாலும் அவர்களின் நடிப்பில் நமக்கு காமெடி தோன்றவில்லை. கடுப்புதான் தோன்றியது! அடுத்த வடிவேலுவாக ஜொலிக்கக் கூடியவர் மாறன்தான்!
ஆக மொத்தத்தில் விபத்து நடந்த பிறகு யாஷிகாவை பார்த்தது ரொம்பவே ஒரு சந்தோஷம் இந்த “பெஸ்டி” கொஞ்சம் திருஷ்டி தான்.