• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

18ஆம் வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி

by Tamil2daynews
December 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

18ஆம்  வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி

 

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும்.

நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் சண்டக்கோழி திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது..  இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’ ஒளிபரப்பாகும்போது அதை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

‘சண்டக்கோழி வெளியாகி’ இன்று 18 வருடங்கள் ஆன நிலையில் தனது உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷால். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது..

“18 வருடங்களுக்கு முன்பு 2005 டிசம்பர் 16 அன்று தமிழ் சினிமாவில் ‘சண்டக்கோழி’ என்கிற மேஜிக் மூலமாக வெள்ளித்திரையில் ஒரு ஆக்சன் ஹீரோவாக என்னுடைய திரையுலக பயணத்தை துவக்கி வைத்த இந்த நாளை இப்போதும் நம்ப முடியவில்லை அல்லது என் உணர்வுகளை, எண்ணங்களை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை. இன்றுவரை அனைவராலும் என்மீது  காட்டப்பட்டு வரும் அன்பு மற்றும் ஆதரவு என்கிற ஒரே காரணத்திற்காக அப்போதிருந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பார்வையாளர்களில் ஒருவனாகவே தொடரும் நான் அப்போது என்னை திரும்பி பார்க்கவே இல்லை.

எனக்கு மேலே உள்ள கடவுளுக்கும் மற்றும் கடவுள்கள் போன்ற என்னுடைய பெற்றோர், என்னை நம்பிய என்னுடைய இயக்குநர் லிங்குசாமி, மேலும் கடைசியாக உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் உருவில் நான் பார்த்த கடவுள்களுக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன். எப்போதுமே உங்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளதுடன், என்னுடைய தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் கனவை தொடர்வேன். உங்களுக்கு நன்றி சொல்வது என்பது மட்டுமே போதுமானது அல்ல.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.
Previous Post

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

Next Post

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

Next Post

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.