• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
July 5, 2025
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
3 BHK விமர்சனம் 

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 3BHK. மீதா ரகுநாத் , சரத்குமார் , தேவயானி , சைத்ரா , யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஸ்வா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

3BHK திரைப்படம் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவுகளையும் அவர்களின் தியாகங்களையும் மிக எதார்த்தமாக சித்தரித்துள்ளது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக சரத்குமார் தனது உடல் நிலையைக் கூட பார்க்காமல் தனது பிள்ளைகளை படிக்க வைக்க போராடுகிறார். தனது தந்தையின் (சரத்குமார்) கனவை நிறைவேற்ற அவரது மகன் சித்தார்த் தனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டு   பிடிக்காத வேலைக்கு செல்கிறார். மகள் மீதா ரகுநாத் தனது படிப்பை கைவிட்டு மாமியார் வீட்டில் நடக்கும் கஷ்டங்களை சகித்துகொள்கிறாள். சித்தார்த் , சரத்குமார் , தேவயானி , மீதா என படத்தில் அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள்.
3BHK' movie review: This Siddharth-Sarath Kumar-starrer radiates warmth and goodness - The Hindu

மனைவி சாந்தி(தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தியுடன் (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் வாசுதேவன்(சரத்குமார்). குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளும் வாசுதேவன் தான். சொந்தமாக வீடு வைத்திருப்பது என்பது மரியாதை என நினைப்பவர் அவர்.

தங்களுக்கு என்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கனவு காண்பதுடன் பணமும் சேர்த்து வைக்கிறார் வாசுதேவன். ஆனால் வீடு வாங்க கிட்டத்தட்ட பணம் சேரும்போது கூடவே ஏதாவது செலவு வந்து அதை நடக்கவிடாமல் செய்கிறது.

மகன் பிரபு படித்து நன்றாக சம்பாதித்து தன்னுடைய வீடு கனவை நிறைவேற்ற உதவி செய்வான் என நினைக்கிறார் வாசுதேவன். ஆனால் பிரபுவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் டொனேஷன் கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது. மேலும் மகளின் கல்யாண செலவு வருகிறது. வாசுதேவனுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனை செலவு வந்துவிடுகிறது.

இப்படி வீடு வாங்க முயற்சி செய்யும்போது எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து பணம் செலவாகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் வீடு வாங்க முயற்சி செய்யும்போது எல்லாம் அது நடக்காமல் போகிறது. இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் விடாமுயற்சி செய்கிறார் வாசுதேவன்.
3BHK' movie review: This Siddharth-Sarath Kumar-starrer radiates warmth and goodness - The Hindu

வாசுதேவனின் சுமார் 20 ஆண்டு கால வீடு கனவு என்னவாகிறது என்பதே 3 பி.ஹெச்.கே. படத்தின் கதை ஆகும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்வோம் என ஆசைப்படும் போது இன்னொரு வாடகை வீட்டிற்கு செல்லும்போது சரத்குமார் முகத்தில் தெரியும் வேதனையை நடுத்தர வர்க்கத்தினரால் உணர முடிகிறது.

46 வயதான சித்தார்த் 3 பி.ஹெச்.கே. படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். அவரை பார்த்தால் பள்ளி மாணவன் போன்றே தெரிகிறது. அவருக்கு வயதே ஆகாதா என வியக்க வைக்கிறார். பிரபு கதாபாத்திரமாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்.

வீடு வீடு என கனவு காணும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் சரத்குமார். மீதா ரகுநாத் தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார். சரத்குமார், தேவயானியை சேர்ந்து பார்க்கும் போது சூர்யவம்சம் படம் கண் முன்பு வந்து போகிறது.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் சொந்த வீடு வாங்கி அதில் தான் என் உயிர் போக வேண்டும் என வைராக்கியமாக இருக்கும் பல நடுத்தர வர்க்கத்தினரின் உணர்வுகளை அப்படியே காட்டியிருக்கிறது படம்.
3BHK' Review | Siddharth-Sarathkumar starrer has its heart in the right place, though story isn't new | Onmanoramaஅதில் வரும் முக்கிய கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புரோக்கராக வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். அம்ரித் ராம்நாத்தின் இசை படத்திற்கு பக்கபலம்.

வாழ்க்கையில் எத்தனை பிரச்சனை வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் கனவை நோக்கி பயணிப்பது தான் நடுத்தர வர்க்கம் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் ஸ்ரீ கணேஷ்.

தேவையில்லாத பன்ச் டயலாக், சீன் என எதுவும் வைக்காமல் உள்ளதை உள்ளபடியே காட்டியது படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட். இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.

திரைக்கதையில் இதை சற்று தவிர்த்து இருக்கலாம் இயக்குனர்.

குறைக்காத நாயுமில்லை,குறை சொல்லாத வாயும் இல்லை, என்ற சொல்லுக்கு 3 BHK படம் அற்புதமான உதாரணம்.

மொத்தத்தில் இந்த 3 BHK படம் நடுத்தர மக்களின் கனவு படம்.
Previous Post

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

Next Post

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

பறந்து போ - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.