• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் – நயன்தாரா கூட்டணியின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி ‘

by Tamil2daynews
September 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் – நயன்தாரா கூட்டணியின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி ‘

 

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’  படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி  ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
Imageவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது.

‘அரண்மனை’ பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கி வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட இயக்குநர் சுந்தர் சி- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 ‘எனும் திரைப்படத்தினை இயக்குவதால், இந்தத் திரைப்படமும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தை விட, பல அற்புதமான திரையரங்க அனுபவ தருணங்களை வழங்கும் வகையில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுந்தர் சி – வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் -நயன்தாரா கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Next Post

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

Next Post

18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.