• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

by Tamil2daynews
August 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும்  “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர்  அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில்,  அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.

சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய  நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும்,  அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும்  பெண்ணுக்குமான ஒரு அழகான  நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும்  உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது.

தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு,  தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக  இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர்  அனில் V.நாகேந்திரன்.

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா,  அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர்  முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும்  கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர்.  இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் – அனில் V.நாகேந்திரன்
இசை – M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார்
ஒளிப்பதிவு –  கவியரசு, சினு சித்தார்த்     எடிட்டிங் – பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி      கலை இயக்கம் – கே. கிருஷ்ணன் குட்டி
இணை இயக்கம் – கே. ஜி. ராம் குமார்      ஒப்பனை – பட்டணம் ரஷீத் சண்டைப் பயிற்சி – மாஃபியா சசி பாடல்கள் நவீன் பாரதி,உடைகள் – இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி   சவுண்ட் டிசைன் – என்.  ஹரி குமார் மக்கள் தொடர்பு – குணா, சதீஷ், சிவா (AIM)

Trailer –

https://youtu.be/KKy4seS2bY8?si=H8iNarHu6R2Qij_s
Previous Post

JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு;

Next Post

நறுவீ – விமர்சனம்

Next Post

நறுவீ - விமர்சனம்

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.