• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by Tamil2daynews
May 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 

திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர்  திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பில் இருந்தே அதன் தன்மையை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்தப் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், “முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம். படத்தை பார்க்கும் போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார்.

ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.  இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
Previous Post

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Next Post

எஸ்.எழில் இயக்கும் “தேசிங்குராஜா-2” ஜூலை 11 வெளியீடு

Next Post

எஸ்.எழில் இயக்கும் “தேசிங்குராஜா-2” ஜூலை 11 வெளியீடு

Popular News

  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.