• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

by Tamil2daynews
November 13, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

 

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என்கிற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார். டிரைலர் நிஜமாகவே சிலிர்க்கவைக்கும் விதமாக இருப்பதுடன் ராதிகாவும் அகோரா கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார். ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்பது முற்றிலும் உண்மை. சீனியர் நடிகரான ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி. இயக்குநர் ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இந்தப்படத்தை இயக்குகிறார்.

நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடனத்தை மோகனும் கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்

வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைரதேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Previous Post

ஜிகர்தண்டா 2 – விமர்சனம்

Next Post

‘ரெய்டு’ – விமர்சனம்

Next Post

'ரெய்டு' - விமர்சனம்

Popular News

  • சாவீ – விமர்சனம்   ரேட்டிங் – 3/5

    சாவீ – விமர்சனம் ரேட்டிங் – 3/5

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

December 5, 2025

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

December 5, 2025

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் ‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!

December 5, 2025

செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

December 5, 2025

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

December 5, 2025

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

December 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.