• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! – பூஜையுடன் தொடங்கியது

by Tamil2daynews
March 18, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! – பூஜையுடன் தொடங்கியது

 

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ’யுவன் ராபின் ஹூட்’ (Yuvan Robin Hood) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் குமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் குமார் கூறுகையில், “நாயகனுக்கு அவனது அம்மா காந்தி என்று பெயர் வைப்பதோடு, காந்தியை போல் அகிம்சை குணத்தோடும், அமைதியானவராகவும் வளர்க்கிறார். ஆனால், சிறு வயது முதலே காந்தி என்ற பெயரால் மற்றவர்கள் நாயகனை கேலி கிண்டல் செய்வதோடு, எது செய்தாலும் அமைதியாக இருக்க முடியுமா ? என்று கேட்டு அடித்து விடுகிறார்கள். மகனை அடித்தவர்களிடம் சண்டைக்கு செல்லும் அவனது தாயின் கடும்கோபத்தை அன்று தான் நாயகன் பார்த்து மிரண்டு போக, அம்மாவிடம் இவ்வளவு கோபம் எதற்கு என்று கேட்கிறார். அப்போது தான் அவரது தாய், உன் அப்பாவும் இப்படி தான் இருந்தார். ஊருக்காகவும், மக்களுக்காகவும் முன் நின்றவர், பிறருக்கு எதாவது பிரச்சனை என்றால் ஓடி ஓடி உதவி செய்வார். ஆனால், அவருக்கு ரவுடி என்ற முத்திரையை இந்த சமூகம் குத்திவிட்டது. அதனால், தான் நீயும் அப்படி வளரக்கூடாது என்பதால் உனக்கு காந்தி என்று பெயர் வைத்து அமைதியானவனாக வளர்க்கிறேன், என்று கூறுகிறார்.

காந்தி என்ற பெயர் மட்டும் இன்றி, அகிம்சை போக்கையும் விரும்பாத நாயகன், தன் அப்பாவின் பாதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதன்படி, காந்தியாக இருப்பவர், ராபின் ஹூட்டாக உருவெடுத்து பாதிகப்பட்டவர்களுக்கு தனது அதிரடி நடவடிக்கையால உதவி செய்கிறார். இதனால், அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்பட ராபின் ஹூட்டை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதன்படி மக்களுக்கு உதவி செய்யும் ராபின் ஹூட்டை பிடிக்க காவல்துறை ஒரு பக்கம் துரத்த, மறுபக்கம் வில்லன் கும்பல் துரத்துகிறது. இரு தரப்பிடம் இருந்தும் நாயகன் தப்பித்தாரா? இல்லையா? என்பதை அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடும், கமர்ஷியல் அம்சங்களோடும் சொல்வது தான் படத்தின் கதை.” என்றார்.

மார்டின் கிளமண்ட் இசையமைக்கும் இப்படத்திற்கு மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார்.

சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது. நேரடி தமிழ்ப் படமாக உருவாகும் இப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

நடிகர்கள்:

வீரன் கேஷவ், அல்பிஃயா ஷேக், ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர் தேஷ்பாண்டே, சந்திர சேகர் மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு நிறுவனம் : பேஷன் மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பு : சந்தோஷ் குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் : சந்தோஷ் குமார்
இசை : மார்டின் கிளமண்ட்
ஒளிப்பதிவு : மேத்தீவ் ராஜன்
படத்தொகுப்பு : சரண் சண்முகம்
பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ் சுகு

Previous Post

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Next Post

‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்: கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்!

Next Post

'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்: கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்!

Popular News

  • 2018ஆம் ஆண்டின் வசூல் சக்கரவர்த்தி யார்?

    2018ஆம் ஆண்டின் வசூல் சக்கரவர்த்தி யார்?

    0 shares
    Share 0 Tweet 0
  • Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கேம் ஆப் லோன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.