• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டியூட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
October 18, 2025
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டியூட் – விமர்சனம் 

இந்த தீபாவளி டியூட் படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்த பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், தனது ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்தார்.இளைஞர்களின் இதயத்துடிப்பாக வலம் வந்த பிரதீப் ரங்கநாதன் தனது மூன்றாவது படத்திலும் கார்த்திக் முத்திரை பதித்துள்ளார்.

பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார்.

இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘டியூட்’ படத்தின் திரைக்கதை.

முன்பே சொன்னது போல ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து கொடுத்து வருகிறார் பிரதீப். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி, நடிக்கும் படமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த ‘டியூட்’ படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகளும் அதனூடே டைட்டிலை அறிமுகம் செய்த விதமும் பக்கா தியேட்டர் மெட்டீரியல். அதிலும் மாப்பிள்ளையிடம் பிரதீப், “தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ?” என்று கேட்கும் இடமெல்லாம் அரங்கம் அதிர்கிறது.

இதுபோல படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் ஸீ தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் சரத்குமாரிடம் மமிதா பைஜு பேசும் இடம் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு. பல இடங்களில் நகைச்சுவை நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் பெரும் பலமும் அதுதான்.

பிரதீப் ரங்கநாதனின் மேனரிசத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். அது படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ ‘ரொம்ப நல்லவர்’ என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஹீரோயினும், அவரது காதலரும் பிரதீப் குறித்து பேசுவதாக வரும் காட்சியும், அதை திராவிட் செல்வம் செல்வம் கேட்பதும் 90-களின் டெக்னிக்.

ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்.

இந்த வெகு சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாக சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது இந்த ‘டியூட்’.

மொத்தத்தில் இளசுகளுக்கும், பெருசுகளுக்கும் அனைத்து தரப்பினர்களுக்கும் இந்த டியூட் தீபாவளி அதிரடி சரவெடி தான்.
Previous Post

காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !, 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை !!

Next Post

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

Next Post

சிலம்பரசன் TR - வெற்றிமாறன் - அனிருத் - கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் 'அரசன்'படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

October 18, 2025

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

October 18, 2025

“‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

October 18, 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

October 18, 2025

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.