• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சக்திதிருமகன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சக்திதிருமகன் –  விமர்சனம் 

மார்கன் என்ற பெரிய வெற்றிக்குப் பிறகு அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, ஹீரோவாக நடித்துள்ள சக்தித் திருமகன்.

நடிகர் விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவரது லேட்டஸ்ட் படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பில் தயாரித்துளளார்.

அருண் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் வாகை சந்திரசேகர், கண்ணன், ரியா ஜிது, ஷோபா விஸ்வநாத், பிரசாந்த் பார்த்தீபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேமண்ட் டெர்ரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி தான் இசையமைத்து உள்ளார்.

இப்படம், அரசியல் ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டது. 1989-ல் கதை தொடங்குகிறது. பழங்குடிப் பெண் கற்பழித்து  கொலை செய்யப்பட, போலீசார் விசாரணையை தொடங்குகின்றனர். அப்போது தொழிலதிபரின் அழுத்தம் வருகிறது. தொழிலதிபரின் அழுத்தத்தால் வழக்கு திசை மாறுகிறது. அந்தப் பெண்ணின் குழந்தை குப்பையில் வீசப்படுகிறது. அதன்பிறகு  சக்தி திருமகனாக எண்ட்ரி ஆகும் ஹீரோ என்ன செய்தார்?
என்பதே படத்தின் மீதிக்கதை.

“அண்மை காலங்களில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் திரைப்படம் . ஒரு நொடி கூட சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாக செல்கிற முதல் பாதி. இரண்டாம் பாதியில் ஒரு சில லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து தரமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் அருன்பிரபு. அரசியல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டி , ஊழல் , போன்ற விஷயங்களை மிக சுவாரஸ்யமான முறையில் காட்சிபடுத்தியிருக்கிறார்கள். இதில் பல கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் சமகால பிரச்சனைகளை நினைவுபடுத்துகின்றன.  விஜய் ஆண்டியின் 25 ஆவது படமாக சக்தி திருமகன் ஒரு நல்ல தேர்வு” என விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாயகன் கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்காகவே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. அதில் அவர் மிக சிறப்பாக நடித்து உள்ளார். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருக்கும் வில்லம், அதிலும் அடுத்த ஜனாதிபதி ஆக இருப்பவரை இவர் 4 பேரை வைத்துக்கொண்டு இவர் மாஸ் ஹீரோ போல் இரண்டாம் பாதியில் செய்யும் வேலைகள் எல்லாம் அநியாய லாஜிக் மீறல்.
விஜய் ஆண்டனி ப்ளாஷ்பேக் காட்சி வாகை சந்திரசேகர் வருவது பெரியாரிசம் பற்றி பேசுவது போன்ற முற்போக்கு கருத்துக்கள் எல்லாம் சிந்திக்க வைக்கும் காட்சிகள், அதே போல் இரண்டாம் பாதி முழுவதும் வசனங்களால் தினித்து இல்லாமல் காட்சிகளால் மக்களை சிந்திக்க வைக்கும்படி இருந்திருக்க வேண்டாமா.. டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் சூப்பர்.
தியேட்டரில் விசில் பறக்க, ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிப்பார்கள் இந்த சக்தி திருமகனை.
மொத்தத்தில் இந்த சக்தி திருமகன் அரசியல் சாணக்கியன்.
Previous Post

கிஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

படையாண்ட மாவீரா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

படையாண்ட மாவீரா - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

August 28, 2026

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.