• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

படையாண்ட மாவீரா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
September 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
படையாண்ட மாவீரா – விமர்சனம் 

முந்திரி காட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லிவிட்டு ஒரு சில விஷயங்களை மறைத்துவிட்டு வியாபார நோக்கத்திற்காக  எடுக்கப்பட்டு இருக்கும் படம் படையாண்ட மாவீரா.

டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கை கதை ஒட்டி அவரது புகழ் பாடும் படமாக உருவாகி உள்ளது  படையாண்ட மாவீரா..
அரியலூர் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்கும் தொழிற்சாலையை தடுப்பதற்காக அங்குள்ள ஏழை மக்களின் இடத்தை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து காடுவெட்டி குரு குரல் கொடுக்கிறார். தான் வாழும் பகுதியில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக எப்படி எல்லாம் போராடினார், அவர் வாழ்க்கையில் சேர்த்த சொத்து என்ன? அவரை மக்கள் எப்படி கொண்டாடினார்கள் என்று கதை செல்கிறது.
Padaiyaanda Maaveeraa Trailer : காடுவெட்டி குருவாக கௌதமன் நடிக்கும் 'படையாண்ட மாவீரா' படத்தின் டிரெய்லர் வெளியானது.! | Director Gowthaman Padaiyaanda Maaveeraa Trailer Out Now ...

காடுவெட்டி குரு பாத்திரத்தில் வா கவுதமன் நடித்திருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார். என்னதான் காடுவெட்டி குரு கதையாக இருந்தாலும் ஒரு சில உண்மை சம்பவங்கள் மற்றபடி புனையப்பட்ட கதையாகவே இப்படம் உருவாகி இருக்கிறது.

குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதமன் உணர்ச்சிப் பெருக்குடன் நடித்திருக்கிறார்.

ஏழை மக்களுக்கு எதிராக போலீசார் நடத்தும் அராஜகத்தை தட்டிக் கேட்பதும், சீரழிக்கப்படும் பெண்களுக்கான நியாயத்தை  தட்டி கேட்க சரியான தண்டனை தருவதன் மூலமும் காட்சிகளில் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இது ஒரு சாதிய அடையாளங்ககளுடன் சொல்லப்பட்டிருந்தாலும் கதை என்னவோ பொதுவான ஒரு கதையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட பரம்பரையும், ஒதுக்கப்பட்ட சமூகத்தினரும் ஒன்றாகவே சகோதர பாசத்துடன் பழகினார்கள் என்ற காட்சிகளை அமைத்து இரு பிரிவினருக்குமான அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்திருக்கிறார்.ஆனால் சினிமாவால் அந்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமா என்பதெல்லாம் சந்தேகம் தான்.

கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார். தொடக்கத்தில் சில காட்சிகள், இடையில் சில காட்சிகள் என்று தலை காட்டிவிட்டு செல்கிறார்.
கௌதமன் நாயகனாக நடிக்கும் 'படையாண்ட மாவீரா'! | Gothaman actor - Padaiyanda Maveera Movie - fnewsnow.com

கவுதமனின் தந்தையாக சமுத்திரக்கனி, தாயாக சரண்யா நடித்துள்ளனர்.மேலும் இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, ரெடி கிங்ஸ் லீக்கு மிகவும் கனமான கதாபாத்திரம் .மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா ஆகியோரு ம் நடித்திருக்கிறார்கள்.

நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் பளிச்சென ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கவிஞர் வைரமுத்துவின் துடிப்பான பாடல் வரிகள், ஜீவி பிரகாஷின் இசையில் மூழ்கி துள்ளி குதித்திருக்கிறது.

சாம் சி. எஸ்.  பின்னணி இசை  ஓகே ரகம்.

இயக்குனர் கவுதமன் ஏதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே காட்சிகளில் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.குருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அரசியல் ரீதியாக நடந்த துரோகங்கள் என்று வெளி உலகில் பேசப்படும் எந்த எதிர்மறை கருத்துக்களைப் பற்றி வாய் திறக்கவில்லை.

முழுக்க முழுக்க பாமக கட்சியினரை திருப்திப்படுத்தும் விதமாகவே காட்சி அமைப்புகளை எடுத்திருக்கிறார் கௌதமன்.

தனது சொந்தக் கட்சியே காடுவெட்டி குருவிற்கு செய்த துரோகங்களை படத்தில் மறைக்கப்பட்டாலும் முந்திரி காட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.
மொத்தத்தில் இந்த படையாண்ட மாவீரா படத்திற்கு.பாமக கட்சியினரே  வருவீரா.
Previous Post

சக்திதிருமகன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

தண்டகாரண்யம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

தண்டகாரண்யம் - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.