• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கிஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
September 21, 2025
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிஸ் – விமர்சனம்

பிளடி பெக்கர் படத்திற்கு அடுத்தபடியாக கவின் நடித்துள்ள ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கிஸ்’. இப்படத்தை தேசிய விருது வென்ற நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். பிரபு , விடிவி கணேஷ் , ஆர் ஜே விஜய் , தேவயானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

நாயகனான கவினுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வதைப் பார்த்தால் அதன் பிறகு அவர்களின் எதிர்காலத்தை பார்க்கக் கூடியவராக இருக்கிறார். இந்த சக்தி கவினின் காதல் வாழ்க்கைக்கு பிரச்சனையாக உருவாகிறது. தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்ள கவின் தனது விதியை எதிர்த்து போராட வேண்டும் . Kiss X Review | Kiss Twitter Review | Kiss X Review Rating | Kiss Tamil Movie Review | How Audiences Are Reacting To Kavin And Preethi Asrani Starrer Romantic Comedy Film - Filmibeat

“மொத்த படத்தையும் கவின் தனது நடிப்பால் தாங்கியிருக்கிறார். நடிப்பு , ஆக்‌ஷன் காட்சிகள் என ஒரு முழுமையான நடிகராக கவின் நடித்துள்ளார். ஜென் மார்டினின் இசை படத்திற்கு ஒரு புதிய வைப் சேர்த்திருக்கிறது . படத்தின் ஓப்பனிங் காட்சி , இடைவேளை மற்றும் பாடல்களில் நடன காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

படத்தின் கதைக்களம் ஒரு ஃபேன்டஸி கலந்த ரொமாண்டிக் காமெடி டிராமா. ஒரு சாதாரண இளைஞனோட வாழ்க்கையில் வர்ற பிரச்சனைகள், அவனோட காதலும் குடும்ப உறவுகளும் எப்படிப் பாதிக்கப்படுதுங்கறதை இந்தப் படம் பேசுது.

இயக்குனர் சதிஷோட கதைக்களம் நல்லா இருக்கு. ஆனால் படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் இருக்கு.

படத்தின் பின்னணி இசை பல கிருத்துவ பைபிளை ஞாபகப்படுத்தினாலும் ஒரு சில இடங்களில் பின்னணியில் முன்னணி நிற்கிறார் இசையமைப்பாளர்.
Kiss movie review: Kavin's romantic fantasy is sweet until it lingers but fails to seal with clear writing

கதாநாயகி அயோத்தியில் நடித்தவராய் இவர் என்று வசீகரமாக பார்க்கும் அவர் நம் மனதையும் கொள்ளை கொள்கிறார்.

நடனத்தில் தூள் கிளப்பிக் கொண்டிருந்த சதீஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே இவர் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தினுடைய கதைகளம் நன்றாக இருக்கிறது. முதல் பாதி பொறுமையாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக, நகைச்சுவை காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

விஜய், விடிவி கணேஷ் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவர்களுடைய ரோல் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். படத்தில் வரும் காதல் காட்சிகள், பேண்டஸி விஷயங்கள் எல்லாமே பெரிதாக கனெக்ட் ஆகும்படி இல்லை. காதல் என்றாலே பிடிக்காது என்ற ரோலில் கவின் நடித்திருக்கிறார். அதற்குப்பின் அவருக்கு கிடைத்த காதல் புத்தகத்தை வைத்து அவருடைய வாழ்க்கையில் நடக்கும் கதையைத்தான் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.

கவின் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார். அவரை அடுத்து ஹீரோயினியுமே சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், கதாபாத்திரங்களை ஃபேண்டஸி விஷயங்கள் மூலம் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது தான் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

கவின் கதாபாத்திரம் அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் கதாபாத்திரம் ஞாபகம் வருவது மறக்க முடியவில்லை.

மொத்தத்தில் இந்த கிஸ் இளைஞர்களுக்கு மட்டும்.
Previous Post

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

Next Post

சக்திதிருமகன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

சக்திதிருமகன் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.