• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!

by admin
March 6, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்!
0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே தான் விரும்புவதாக நடிகர் சேத்தன் கூறுகிறார்.

அடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன்.

‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .
சேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.

இதோ அவரே பேசுகிறார்.
“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு. ஆனால் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .
நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,

கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.
.
எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.
நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.

இவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..?

” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags: Cheththanசேத்தன்
Previous Post

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் நந்திதா!

Next Post

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ!

Next Post
கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ!

கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.