• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

by Tamil2daynews
June 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

ஆர்வம் மற்றும் விடாமுயற்சி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன், ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன ‘என தெரிவித்துள்ளார்

முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் – ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது.
ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது… கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன.

ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை ( Ragul Bose)  எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன்.

விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி- அங்கீகாரம் -முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு- ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்… இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்… வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்றார்.

Previous Post

ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Next Post

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

நடிகர் சனந்த் நடிக்கும் 'ஹார்ட்டின் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.