• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மாபெரும் கிரிக்கெட்!

by Tamil2daynews
August 12, 2020
in சினிமா செய்திகள்
0
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மாபெரும் கிரிக்கெட்!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் மாபெரும் கிரிக்கெட்!
ஏழை எளியவர்கள் மீது போடப்பட்ட  கொரொனா வழக்குகளை வாபஸ்  பெறுங்கள்! தமிழக முதல்வருக்கு கலப்பை PT செல்வகுமார் வேண்டுக்கோள் :

 


குமரி மாவட்டம்  பொட்டல்குளத்தில்  கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ரீதியான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது ..இதில் பொட்டல்குளம் ,புன்னார்குளம் ,மைலாடி,சுந்தரபுரம்  ,உள்ளிட்ட ஊர்களில் இருந்து 15 அணிகள் மோதின .பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் முதல் பரிசை பொட்டல்குளம் மாஸ்டர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது ..வெற்றி பெற்ற அணிக்கு  பரிசுகளும் ,கோப்பையும் வழங்கி பத்திரிக்கையாளர் சந்திப்பில்  கலப்பை  PT செல்வகுமார் பேசியதாவது :


குமரி  மாவட்ட இளைஞர்கள் உற்சாகமாக  கிரிக்கெட் விளையாட்டில்  கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் .அந்த காலத்தில் 100 இளைஞர்கள் வாருங்கள்இந்தியாவையே மாற்றுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார் .ஆனால் இன்று நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை ஊழலை ஒரு பேஷனாக கொண்டு வந்துவிட்டார்கள் .ஊழல்கள் ஒழிக்கப்படவேண்டும் .ஒரு கிரிக்கெட் போட்டிக்காக இளைஞர்கள் இந்த மலைப்பகுதியில் உடலை உற்சாகமாக வைப்பதற்காக அவர்கள் வருவது நல்ல விஷயம் .அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இந்த போட்டியை நடத்தினோம் ..இளைஞர்களால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர  முடியும் .நம் மண்ணில் இருந்து இந்திய அணியில் விளையாடும் வகையில் நீங்கள் உருவாக வேண்டும் .கொரோனா என்னும் கொடிய நோயால் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் .கொரோனா நோயை யாரும் வேண்டும் என்று கொண்டு வரவில்லை .ஆகவே யாருக்காவது கொரோனா வந்தால் அவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காதீர்கள் .இன்று விவசாயம் கல்வி பொருளாதாரம் ,சிறு தொழில் போன்றவை கேள்விக்குறியாக உள்ளது .எப்படி நாம் இந்த பொருளாதார பிரச்னையில் இருந்து மீண்டு வர போகிறோம் என்பதே மிக பெரிய சவாலாக உள்ளது .கஷ்டத்திலும் வறுமையிலும் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நாம் கை  கொடுத்து உதவ வேண்டும் ..

.வலியோர்கள் எளியோரை தாக்குவது பெரிய விசயமே இல்லை .அரசும் அதிகாரிகளும் சாதாரண கூலித்தொழிலாளிகளை வலுக்கட்டாயமாக பிடித்து வாகனங்களை பறித்து  லட்சக்கணக்கான வழக்குபோடுவது மிகவும் வேதனை அளிக்கிறது .ஐயா எடப்பாடி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அவருக்கு எளிய மக்கள் கஷ்டம் புரியும் .இந்த மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாகனங்களையும் திருப்பி கொடுக்க ஆவணம் செய்ய வேண்டும் .ஒவ்வொரு இளைஞர்களும் இது தன்னுடைய குடும்ப பிரச்சனை போல் எண்ணி  பொதுத்தளத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .  மக்களை காப்பாற்ற தான் சட்டமே தாவிர சட்டத்தை காப்பாற்ற மக்கள் இல்லை ..உண்ண உணவின்றி ,செலவுக்கு பணமின்றி,வேலை தொழில் செய்ய வழியின்றி அணு அணுவாக சாமானியர்கள் சித்திரவதை அனுபவிக்கிறார்கள் .இவர்கள் ஒன்றும் குற்றவாளிகளோ ,ரவுடிகளோ ,திருடர்களோ இல்லை.எளியவர்களையும் வலிமையற்றவர்களையும் அடக்குவதும் அதிகாரம் செய்வதும் பெரிய வீரம் இல்லை  என்று பேசினார்

இந்நிகழ்வில் கலப்பை சட்ட ஆலோசாகர் பாலகிருஷ்ணன் ,கலப்பை மகளிர் அணி தலைவி பேராசிரியர் ரெங்கநாயகி, முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் ஏசு தாஸ் ,வளர்நகர் ஊர் தலைவர் மைக்கேல் சாம் மனோகர் ,பொட்டல்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் பொருளாளர் ஆறுமுகம் .மூலிகை தியான மண்டபம் சித்தர் தியாகராஜ சுவாமி ,குமரி மாவட்ட கலப்பை தலைவர் சிவபன்னீர் ,கலப்பை நிர்வாகி ரூபன் ,ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Previous Post

நம்ம 12B ஷாம்  புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

Next Post

ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள “கோமாளி” பட நடிகை.படங்கள் உள்ளே….

Next Post
ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள “கோமாளி” பட நடிகை.படங்கள் உள்ளே….

ஆள் இல்லாத காட்டில் அந்மாதிரி போஸ் கொடுத்துள்ள "கோமாளி" பட நடிகை.படங்கள் உள்ளே....

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.