• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய  குறும்படம் ‘மூடர்’

by Tamil2daynews
September 21, 2020
in சினிமா செய்திகள்
0
இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய  குறும்படம் ‘மூடர்’
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் ‘மூடர்’.
கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. :பிஹைன்வுட்ஸ்’ தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இக்குறும்படத்திற்கு  பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெற்றுள்ளன.
இப்படத்தை இயக்கி இருப்பவர் தாமோதரன் செல்வகுமார்.
இப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பிரபலமானவர்கள். விஜய் டிவி ‘ராஜாராணி’ புகழ் கார்த்திக் சசிதரன்,சன் டிவி ‘பாண்டவர் இல்லம்’ புகழ் ஆர்த்தி சுபாஷ் ,  ‘கல்லூரி’ படத்தில் நடித்த மதன் கோபால் ,’உறியடி2 ‘ சசி குமார், பிர்லா போஸ், அனிஷா சக்தி முருகன், வினோத் லோகிதாஸ், சிவகுமார் ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு-கலை சக்தி ,இசை ஜே.சி.ஜோ,எடிட்டிங்- எம்.கே. விக்கி.
இக்குறும்படத்தை பல்லவாஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் பேசும்போது
“நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதி ல்லை. சினிமா மீது உள்ள காதலால் ஏழு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு ‘மூடர் ‘ குறும்படத்தை எடுத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதற்கு முன்பும் சில குறும்படங்கள் எடுத்து இருந்தாலும் இதில் ஒரு திரைப்படத்திற்கான முன் முயற்சியாக முழு உழைப்பைப் போட்டிருக்கிறோம். அடுத்து ஒரு திரைப்பட முயற்சியில் இறங்கி இருக்கிறோம் .ஓடிடியில் வெளியிடும் வகையில் அப்படம் உருவாக இருக்கிறது” என்கிறார்.
Previous Post

Hero Kartikeya Gummakonda to play NIA officer in debutant Sri Saripalli’s direction !!

Next Post

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

Next Post
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.