• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ரசிகர்களின் பாராட்டிற்காக காத்திருக்கிறேன் – குப்பத்துராஜா நாயகி!

by admin
March 31, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ரசிகர்களின் பாராட்டிற்காக காத்திருக்கிறேன் – குப்பத்துராஜா நாயகி!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரை பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.

படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம்.

Previous Post

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும்  “நிக்கிரகன்”

Next Post

டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’

Next Post
டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’

டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’

Popular News

  • மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசாமில் கொட்டும் மழையில் மக்களுக்கு உதவிவரும் அபி சரவணன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!

    0 shares
    Share 0 Tweet 0
  • யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.