• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் பிரகாஷ்ராஜ் , ஆதி நடிக்கும் “கிளாப்”  படத்தில் இணைந்தார் ! 

by Tamil2daynews
November 26, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகர் பிரகாஷ்ராஜ் , ஆதி நடிக்கும் “கிளாப்”  படத்தில் இணைந்தார் ! 
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான  பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன்,  மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது…
சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும்,  இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும்பயணம்.  ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகளை தந்து, இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார்.  நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்கிறபோதே இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறிவிடுமளவு இந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் அவர்.  பொதுமுடக்க காலத்திற்கு பிறகு எங்கள் படமான “கிளாப்” படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைவது பெரும் மகிழ்ச்சி. எப்போதும் முழு ஆர்வத்துடன், படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும்   எளிமையாக பழகி, நேர்மறைத்தன்மையோடு பெரும் உற்சாகத்தை பரப்புகிறார். பொது முடக்க காலத்தின் நீண்ட இடைவேளைக்கு பிறகு “கிளாப்” படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டுள்ளது பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படத்தை வரும் 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும்  “கிளாப்”  படம்  பன்மொழி திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க அனுபவ மிக்க நடிகர்களான பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் மைம் கோபி, முனீஷ்காந்த் மற்றும் பல பிரபல முகங்கள் குறிப்பிட தகுந்த பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய அம்சமாக இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும்தூணாக அமைந்துள்ளது.
Big Print Pictures சார்பில் I.B.கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, P. பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளனர்.
Previous Post

கனடா நாட்டில் கலக்கும் தமிழ் பாடகர்

Next Post

Actress Rashmika Mandanna released Akshith Shashi Kumar’s “Seethayana” second single !!

Next Post
Actress Rashmika Mandanna released Akshith Shashi Kumar’s “Seethayana” second single !!

Actress Rashmika Mandanna released Akshith Shashi Kumar’s "Seethayana" second single !!

Popular News

  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.