• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் ‘அக்கா குருவி’ தமிழ், தெலுங்கில் சாமி இயக்குகிறார்.

by admin
April 6, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் ‘அக்கா குருவி’ தமிழ், தெலுங்கில் சாமி இயக்குகிறார்.
0
SHARES
153
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர்  விருது விழாவில் பங்கு பெற்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ (childrenச் of heaven).  மற்றும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான  வார்சா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Warsaw  International film festival) விழாவில் ஆடியன்ஸ் அவார்ட்,  சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்  விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட் , O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் (OULU international childrens film festival), C.I.F.E.J. அவார்ட், நியூபோர்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் Rhode island விழாவில் – பெஸ்ட் ஃபாரின் பிலிம் அவார்ட் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று உள்ளார்கள்.
 மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் – தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
‘மிருகம்’ படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனரான சாமி இப்படத்தின் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் நம்ம ரசிகர்களுக்காக சில காட்சிகளை இணைத்துள்ளார்.
 இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸர் – ஆன தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம்பெறுகிறது.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள்.
ஒளிப்பதிவு : உப்பல் வி.நாயனார், கலை : வீரசமர், எடிட்டிங் : மணிகண்டன் சிவகுமார்.
படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
Previous Post

நந்திதா தாஸ், ஷ்ரேயா ரெட்டி மாதிரி பெர்ஃபார்மென்ஸ் பட்டைய கிளப்பணுமா? தாராளமா கூப்பிடலாம் மீரா மிதுனை

Next Post

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

Next Post
யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.