• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

by Tamil2daynews
November 30, 2020
in சினிமா செய்திகள்
0
இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த ‘நின்னிந்தலே’ (Ninnindale), ‘ராஜ்குமாரா’ (Raajakumara)  மற்றும் யஷ் (Yash) நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece)  உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜ்குமாரா’ (Raajakumara) திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur )
இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter : 1’ ) பிரஷான்த் நீலின் (Prashanth Neel) அட்டகாசமான இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் யஷ் (Yash) நடித்த ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) வசூல் இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கதை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films)
தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் ( Puneeth Rajkumar)  நடித்து வரும் ‘யுவரத்னா’ (Yuvarathnaa), ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிகழ்த்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ ( KGF : Chapter 1’) படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’)  படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Previous Post

புனிதன் படம் குறித்து விஜய் டிவி ஆதவன் பரபரப்பு பேச்சு*

Next Post

மக்களின் பேராதரவோடு வெள்ளித்திரையில் அசத்தும் அல்டி

Next Post
மக்களின் பேராதரவோடு வெள்ளித்திரையில் அசத்தும் அல்டி

மக்களின் பேராதரவோடு வெள்ளித்திரையில் அசத்தும் அல்டி

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.