• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா !

by Tamil2daynews
December 19, 2020
in சினிமா செய்திகள்
0
திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா !
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரை உலகில் சில பெயர்கள், அவர்களின் நினைவுகள்,  எத்தனை காலம் கடந்தாலும்,  அவர்களின் பிரபல்யம், திரைக்காதலர்கள் மனதிலிருந்து அழியவே அழியாது. அப்படியான புகழ் கொண்டவர்களில் ஒருவர் தான், படைப்பாளி GN. ரங்கராஜன். அவரது அசாத்தியமான திரைப்பயணம் இன்றைய படைப்பாளிகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், அவரது மகன் GNR குமரவேலன் உட்பட, பலருக்கும் பெரும் தூண்டுகோலாக இருந்து வருகிறது. 2020  டிசம்பர் 17 அந்த வரலாற்று நாயகனின் பிறந்தநாள். அவரது நினைவுகள், அவர் தந்த அற்புதமான அறிவுரைகள் பற்றி, அவரது அன்பு மகன் GNR குமரவேலன் பகிர்ந்துகொண்டதாவது…
அளவில்லாத தொழிநுட்ப அறிவை போதித்ததை தாண்டி என்னிடம் அவர் எப்போதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும், யாரையும் வார்த்தையால் கூட புண்படுத்திவிடக் கூடாது, எனபதையே சிறந்த அறிவுரையாக கூறியுள்ளார். அவர் “உனது ஒழுக்கத்தையும், நேர்மையையும் இழந்துவிட்டால், எப்போதும் எப்பாடுபட்டாலும், அதனை திரும்ப பெற இயலாது” என்று கூறிக்கொண்டே இருப்பார். வார்த்தைகளிலும், செயலிலும் எச்சரிக்கையுடனும் அதே நேரம் தன்னம்பிக்கையுடனும்  செயல்பட்டால்,  உன்னை வெற்றியிலிருந்து தடுக்க நினைக்கும், பலரையும் கடந்து கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய் என்பார். நான் அவரது அறிவுரைகளை மதித்து பின்பற்றியதே, திரைப்பயணத்தில் எனது இந்த வெற்றிக்கு காரணமாகும்.
மேலும் GNR குமரவேலன் கூறும்போது…
எனது தந்தை எடிட்டர் துரை சிங்கம் அவர்களிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இயக்குநர் பீம்சிங் அவர்களின் படங்களுக்கு தீவிர விசிறியாக இருந்தார். இயக்குநர் திரு SP முத்துராமன் அவர்களுடன் அசோஸியேட்டாக பல வருடங்கள், 25 படங்களுக்கும் மேலாக பணிபுரிந்தார். அவற்றில் புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ப்ரியா மற்றும் மேலும் பல படங்கள் குறிப்பிடதகுந்தவை. இந்த காலகட்டத்தில் நடிகர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமல்ஹாசன் ஆகியோரிடம் மிகச்சிறந்த நட்பை பேணினார். அந்த காலகட்டத்தில் அவர் இருவரிடமும் கால்ஷீட் பெற்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் அவர்களும், கமல்ஹாசன் அவர்களும், இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்கள். அவர் கமல்ஹாசன் அவர்களை வைத்து ‘கல்யாணராமன்’ எனும் மிகப்பெரும் ஹிட் படத்தை எடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் மற்றும் மகராசன் உட்பட 9 படங்கள் இணைந்து பணியாற்றினார். அவையனைத்துமே  சில்வர் ஜூப்லி படங்கள். பின் அவர் “ராணி தேனி” படம் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அந்த படத்திற்காக கமல்ஹாசன் அவர்கள் சம்பளமே வாங்கவில்லை. நான் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமான படம் கூட இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “சதிலீலாவதி” திரைப்படம் தான்.
GN.ரங்கராஜன் மகராசன் திரைப்படத்திற்கு பிறகு திரை இயக்கத்தை கைவிட்டார். அதன் பின் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கிய அவர்,  தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் “ரகுவசம்” எனும் முதல் மெகா சீரியலை இயக்கினார். சிங்கப்பூர் சேனலுக்காக ஒரு டெலிஃபிலிமையும் இயக்கினார்.
அது அவருக்கு பெருமளவில் பாராட்டுக்களையும், புகழையும் பெற்று தந்தது. திரை உலகத்தில் எண்ணற்ற கலைஞர்களுக்கு, அவர் தூண்டுகோலாக இருந்துள்ளார் திரைத்துறை மீதான அவரது அர்ப்பணிப்பும், காதலும் அழியவேயில்லை. சமீபத்தில் ரிலீஸாகும் படங்களையும், சீரிஸ்களையும், இசையையும் அவர் ரசித்து மகிழ்கிறார். அவர் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் படைப்புகளை பற்றி குடும்பத்தில் எங்களுடன் விவாதிப்பார். அவரது இந்த குணம் என்னுள் பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது தொழில் மீதான உண்மையான நேசமே, நம் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துகொள்ள வழி என்பதை எனக்கு உணர்த்தியுள்ளது.
Previous Post

ஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தயாரித்து எஸ். ஜி. சிவகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆர்டிகல் 41’.

Next Post

SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA

Next Post
SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA

SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL.....CHILE..SOUTH AMERICA

Popular News

  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.