• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ :திரையுலகம் காணாத அதிசயம்!

by admin
April 10, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ :திரையுலகம் காணாத அதிசயம்!
9
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘ழகரம்’.இந்தப்  படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது.
இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ்  போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத்  தயாரித்து வழங்கியிருக்கிறார் .
இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.
 அது என்ன’ ழ கரம் ‘தலைப்பு ?
பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் ‘ழ’ அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக ‘ழகரம்’ என்று வைத்துள்ளார்.
கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .
அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .
கோடிகளில் புழங்கும் திரையுலகில் 10 இலட்சத்தில் ஒரு படத்தை எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் க்ரிஷ் .
 நந்தா உள்பட இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஊதியம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் ஊதியத்தை சினிமா ஆர்வமுள்ள இளைஞர்  ஒருவரின் படைப்பிற்காகத் தாங்கள் செய்துள்ள பங்களிப்பு முதலீடாக இருக்கட்டும் என்று திறமையை முதலீடாக்கிப் பங்கெடுத்துள்ளனர்.
 புதியதாக ஒரு கதையைத் தேடியபோது கிடைத்த ஒரு மர்ம நாவல் தான் ப்ராஜக்ட் ஃ .இதை எழுதியவர் கவாகேன்ஸ் என்கிற பெண்மணி.
கதை பிடித்து திரைக்கதையாக்கி இதோ படமாக முடிந்துள்ளது.
 படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் என மூவர் . இசையமைத்துள்ளவர் தரன். நாயகன் நந்தா,  ஈடன் நாயகி .இவர்கள் தவிர விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர் .
“ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை.
 இன்று  10 இலட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். படத்தில் பெரிய முதலீடு  அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம்  சாதாரணமானதல்ல இதில் வழக்கமான வேடத்தில்  அவரைப் பார்க்க முடியாது .முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில்  நடித்து உள்ளார். திரையில் திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம் நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது .கதிர் பிலிம்ஸ் சார்பில் பால்டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார்.
 திட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் . ஏப்ரல் 12 -ல் படம் வெளியாகிறது .” என்கிறார் இயக்குநர் க்ரிஷ்.
இந்த ‘ழகரம்’ ரசிகர்களுக்கு ஒரு படமாகவும் திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறலாம்
Previous Post

பதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட கவின் ராஜ்!

Next Post

தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

Next Post
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி" - ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

Popular News

  • அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”. 

    அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”. 

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.