• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 

by Tamil2daynews
January 23, 2021
in சினிமா செய்திகள்
0
எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள்

முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்

R.V.உதயகுமார் பேச்சு..

 

 நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு..

“வி.சேகர் சாரின் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்னேஷ் பேச்சு..

 

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் லந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

 

விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியது..

 

“சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மாறியிருக்கிறது அதனால் நல்லது நடக்கும். இந்த முன்னா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுங்கள். அவர்கள் உதவுவார்கள் என்றார்.

 

நடிகர் விக்னேஷ் பேசியதாவது..

 

“வி.சேகர் சாரின் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும். ஆர்.வி உதயகுமார் சாரின் பெரிய ரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். அவமானங்கள் இல்லாமல் வெற்றியில்லை. இனி நல்ல நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

 

பெப்சி சிவா பேசும்போது..

 

“இந்த நிகழ்ச்சி உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. திருப்பியும் சினிமா புத்துணர்ச்சியோடு நடைபோடத் துவங்கி இருக்கிறது. அதற்கு மாஸ்டர் தான் பெருங்காரணம். தியேட்டரில் சினிமா பார்ப்பது தான் ரசிகர்களுக்கு சந்தோசம். அதை மாஸ்டர் படம் உறுதி செய்துள்ளது. அதுபோல இந்த முன்னா படமும் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

 

இயக்குனர் வி.சேகர் பேசியதாவது…

“முன்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவிற்கு பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. ஒரு வெற்றிப்படத்திற்கு நல்ல  கதை இயக்குநர் தான் தேவை என்பது உண்மை. ஒரு படம் எடுக்கும் போதே பலபேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். சின்னப்படங்கள் தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது. பெரிய படங்கள் ஆலமரம் என்றால் சிறிய படங்கள் தான் நெல் போன்றது. எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறை முக்கியம். பெரியபடம் அளவிற்கு நமது சின்னப்படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது..

 

“இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்கு கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும். நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்” என்றார்

 

 

இயக்குநர் சங்கை குமரேசன் அனைவருக்கும் நன்றி சொல்லிப் பேசினார்…

 

“இருக்குறதை வச்சி எடுத்த படம் தான் இது. நிறைய ஏமாற்றங்கள் இருந்தது. ஆனாலும் சொன்னது போல படத்தைத் துவங்கினோம். காரைக்குடி அருகே சுற்றி சுற்றி 34 நாட்கள் எடுத்து முடித்தோம். இந்தக்கதையில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கு. அதனால் கதை நாயகனாக என்னையே நடிக்கும் படி சொன்னார்கள். இந்தப்படத்தின் கதை இருக்குறதை வைத்து வாழ வேண்டும் என்ற ஒருவரி தான். மனதுக்கு நிம்மதியான வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை. இந்தப்படத்தின் முக்கிய நோக்கம் எதற்காகவும் கலங்கத் தேவையில்லை என்ற கருத்தைச் சொல்வது தான் ” என்றார்.

இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் இசை தட்டை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொள்ள நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Previous Post

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                          ஒருவனின் கதை “ முன்னா “       

Next Post

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது

Next Post
தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.