• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

by Tamil2daynews
July 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

 

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?”

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “  பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.

இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் இளன், தனது வழக்கமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் இளன்,  சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது ..
“மிகவும் சுவாரஸ்யமான காதல் கதைகள் என்பது விதிகளைப் பின்பற்றுபவை அல்ல; அவற்றைத் துணிச்சலாக மறுபடியும் எழுதுபவை. “பியார் பிரேமா கல்யாணம்” ஒரு எளிமையான ஆனால் துணிச்சலான கேள்வியுடன் தொடங்குகிறது: திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன ஆகும்? அந்த ஒரு சிந்தனையே, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும், புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையாக விரிகிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகும் இளன், இந்தப் படத்திற்கு புதியதொரு படைப்பாற்றல்மிக்க பார்வையை கொண்டு வந்துள்ளார். அவருடன் இணைந்திருக்கும் அற்புதமான நட்சத்திரக் குழுவும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பையும் தந்து நம்மை ஈர்க்கின்றனர்.

Made in Korea திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் Rise East Entertainment குழுவுடன் எங்களது கூட்டணியைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த மகிழ்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டுகளிப்பதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்..,
”‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு கதையை தேடிக் கொண்டிருந்தபோது, ‘  பியார் பிரேமா கல்யாணம்’ எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”

படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் ‘ப்யார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Previous Post

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

Next Post

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

Next Post
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.