• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

by Tamil2daynews
June 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தின் வசனங்கள் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கே.ஜெ.ஆர் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜூன் 26-ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Previous Post

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

Next Post

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • இதயம் முரளி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.