• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து உருவாக்கிய “Thousand Kisses”

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து உருவாக்கிய “Thousand Kisses”
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் ! –  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “தர்பார்” படத்தின் புரமோ பாடலுக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து  ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ்.

“Thousand Kisses” எனும் இப்பாடல் உருவான விதம்  குறித்து ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் கூறியதாவது…
ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா கிளம்பிக்கொண்டிருந்தேன், அப்போது தான்
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது . அடுத்த சில நாட்களில் எனக்கு கோவிட் – 19 உறுதியானது.  மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிறகு என்னை தனிமைபடுத்தி கொள்ள வேண்டியிருந்தது. தனிமை கொடியதாக இருந்தது. தனிமையை போக்க ஏதாவது செய்ய நினைத்தேன் அப்போதுதான்  எனக்கு இந்த ஐடியா தோன்றியது. முதலில் வெறும் வீடியோவை தான் படம்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னிடமிருந்த இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்துகொண்டு, ஒரு வீடியோவை படம்பிடிக்க துவங்கினேன். மனைவியின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வீட்டுக்குள்ளாகவே பல பின்னணிகளை உருவாக்கி படம் பிடிக்க துவங்கினேன். பின்னர் எனது கிரியேட்டிவ் புரடியூசர் தீபன் M, கலரிஸ்ட் நந்தார், எடிட்டர் PK ஆகியோருடன் உரையாடினேன். அவர்களது அறிவுரைகள் பேருதவியாக இருந்தது. என் மனைவியின் மொபைலில் தான் இந்த வீடியோவை படம்பிடித்தேன். அதில் குளோசப் அதிகம் செல்ல முடியாது. ஒளியமைப்பை முழுக்க நானே செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த பொருட்களை பயன்படுத்தி பல பின்னணிகளை தனியாளாக உருவாக்க வேண்டியிருந்தது. மொட்டைமாடி, குளியலறை ஷவர் என பல இடங்களில் புதுமையான பின்னணியை உருவாக்கி படம்பிடித்தேன். தீபாவளி நாளில் பட்டாசுகளின்  பின்னணியிலும் வீடியோ எடுத்துள்ளேன். இவ்வீடியோவிற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியை அணுகினேன். வீடியோ பார்த்த அவர் கொரியன் பாப் பாடல் உள்ளது என பாராட்டினார்.  அடுத்த  24 மணி நேரத்தில் முதல் பிரதியாக ஒரு இசையை தந்தார். பின்னர் ஒரு மாதத்தில் முழுப்பாடலும் உருவாகி விட்டது. பாடலை பார்த்து விட்டு என்னுடைய குரு ரவி K சந்திரன் அவர்கள், விஜய் மில்டன், GK விஷ்ணு, தினேஷ் கிருஷ்ணன் என பலரும் வியந்து பாராட்டினார்கள். தற்போது ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். பாடலுக்காக உழைத்த கடினமான தருணங்களை இந்த பாராட்டுக்கள் போக்கிவிட்டது. அடுத்த பயணத்திற்கும் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி கூறியதாவது…

முதன் முதலாக ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் இந்த வீடியோவுடன் என்னை அணுகிய போது பிரமித்து போனேன்.  எப்படி இவரால் இப்படி ஒரு அற்புதத்தை தனியாக செய்ய முடிந்தது என ஆச்சர்யமாக இருந்தது. உலகம் முழுதும் மனிதர்கள் இல்லாத வீடியோ பாடல்களில் பல முயற்சிகள் நடந்திருக்கிறது ஆனால் இங்கே அது மாதிரி நிகழ்வுகள் எதுவும் பெரிதாக  நிகழ்ந்ததில்லை. ஒரு கொரியன் பாப் பாடலை பார்க்கும் அனுபவம் இந்த வீடியோவில் இருந்தது. அற்புதமான இசையை உருவாக்கும் தூண்டலை எனக்கு  தந்தது. அவருடன் கலந்துரையாடி அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பாடலில் முதல்பிரதி இசையை உருவாக்கினோம். ஒரு மாதத்தில் பாடலின் முழு வடிவமும் அழகாக உருவாகி வந்தது. “Thousand Kisses” எனும் இந்த அற்புதமான ஆல்பத்தில் எனது பங்கும் இருப்பது பெரும் மகிழ்சையை தந்துள்ளது.

டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி K சந்திரன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.  தமிழில் “ஜீலை காற்றில்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “தர்பார்” படத்தின் புரமோ பாடலுக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Previous Post

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!

Next Post

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Next Post
பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Popular News

  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

    0 shares
    Share 0 Tweet 0
  • ’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.