• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்!

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The beginning ‘உருவாகியிருக்கிறது.
கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கியுள்ளார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார்.
 இந்த’ 2323 ‘படத்தைப்  பற்றி இயக்குநர் பேசும் போது,
“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.
இப்போது முதல் பாகத்தை உருவாக்கியுள்ளேன்.  இது  2020-ல் தொடங்கும் கதை.
இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு கண்டுபிடிப்பை மாயோன்  என்கிற நாயகன் கண்டுபிடிக்கிறான். அதைக் கொண்டு புயலை உருவாக்கலாம்.  கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் அவனது அறிவியல் தொழில்நுட்பத்தை எதிரிகள் திருடி அவனுக்கு எதிராகப் பயன்படுத்தி அவனை அழிக்க நினைக்கிறார்கள். அவன்  அவர்களை எதிர்த்துப் போராடி எப்படி மீள்கிறான் என்பதுதான் கதை.” என்கிறார்.
https://youtu.be/4ngXi41a18c
இப்படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் மிகவும் ரசித்துப் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார். இன்னொரு இயக்குநரான சுப்பிரமணியம் சிவாவும்  டீசரை வெளியிட்டுப் படம்  வெற்றியடைய வாழ்த்தியதுடன் படத்தின் வியாபார சம்பந்தமான சில ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார் .’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ‘ இயக்குநர் ராஜேஷும் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மேலும் பேசும்போது,
 “இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா ,கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா,  வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.
வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.
மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,”என்றவர்,
“நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.அந்த வகையில் இது தமிழ் உணர்வுள்ள அனைவரையும் கவரும் “
 என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன்.
Previous Post

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Next Post

“என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.

Next Post
“என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.

“என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.