• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம் “கார்பன்” !

by Tamil2daynews
March 30, 2021
in சினிமா செய்திகள்
0
நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது திரைப்படம்   “கார்பன்” !
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.


இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் ( ஒண்டிகட்ட படப்புகழ் ), பாவ்லின் ஜெஷிகா ( வாய்தா படப்புகழ் ) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்பே கூறியதுபோல் குப்பை தொட்டி, குப்பை பொருட்கள், குப்பை லாரி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்திருக்கும். படத்தின் கதை 6 இரவுகள் மற்றும் 7 பகலில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. புதுமையான களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் BFA கலை  இயக்கம் செய்ய, பிரவீன் K L எடிட்டிங் செய்துள்ளார்.  கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது.

Benchmark Films சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஶ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Previous Post

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’

Next Post

வரிசி முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு.

Next Post
வரிசி முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு.

வரிசி முயற்சி படைப்பகத்தின் முதல் படைப்பு.

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.