• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

6 விருதுகளை அள்ளிய கடைசி எச்சரிக்கை…. இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட்டார்!

by Tamil2daynews
May 4, 2021
in சினிமா செய்திகள்
0
6 விருதுகளை அள்ளிய கடைசி எச்சரிக்கை…. இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட்டார்!
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார்.

 


சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை. மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் கடைசி எச்சரிக்கை. 23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் வெளியிட, முன்னணி மற்றும் முன்னோடித் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் டீசரை வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் ட்ரைலரை இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட்டார். பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் வெளியிட்டனர். மேலும் இப்படத்தை பார்த்து நடிகர் ஆரி அர்ஜுனன், சமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற ஸ்டன்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஹீலர் பாஸ்கர் மற்றும் இசையமைப்பாளர் தாஜ் நூர் அவர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

இப்போது படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.
இத்தனை பிரபலங்கள் மொத்தமாக பாராட்டியது கடைசி எச்சரிக்கை குறும்படத்திற்கான மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

மேலும், 2020ம் ஆண்டு நடந்த கிளப்பி மினி மூவி ஃபெஸ்டிவலில் சிறந்த படத்துக்கான விருது, செய்ஹர் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கோல்டன்  ஸ்பேரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உள்பட மொத்தம் 6 விருதுகளை கடைசி எச்சரிக்கை படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி எச்சரிக்கை நடிகர்கள் – கலைஞர்கள் விவரம்:

நடிப்பு: டவுட் செந்தில், நெல்லை சிவா, அமிர்தலிங்கம்.
தயாரிப்பு: அரவிந்தன் V என்டர்டெயின்மெண்ட் வ. சீனிவாசன்
எழுத்து – இயக்கம் : சுகுமார் கணேசன்
பாடல்கள் : சுகுமார் கணேசன்
இசை: ஏஐஎஸ் நவ்ஃபால் ராஜா
ஒளிப்பதிவு: வி சந்திரசேகர்
படத்தொகுப்பு: தீபக், விஜய் சங்கர், எம். கோடீஸ்வரன்
ஸ்டுடியோ: நாக் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு: எஸ் ஷங்கர்

Previous Post

சி வி குமார் இயக்கும் கொற்றவை: உண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்

Next Post

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் எனது காம்பினேஷன் ரொம்பவே பேசப்படும்” ; ஒய்.ஜி.மகேந்திரன்

Next Post
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் எனது காம்பினேஷன் ரொம்பவே பேசப்படும்” ; ஒய்.ஜி.மகேந்திரன்

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் எனது காம்பினேஷன் ரொம்பவே பேசப்படும்” ; ஒய்.ஜி.மகேந்திரன்

Popular News

  • ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ..!!

    ஆக்ஷனில் மாஸ் காட்டிய ஆகாஷ் ஜெகன்நாத்.. பட்டையை கிளப்பும் தல்வார் கிளிம்ப்ஸ் வீடியோ..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

October 4, 2026
டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!

டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!

October 4, 2026

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.