• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021

by Tamil2daynews
September 7, 2021
in சினிமா செய்திகள்
0
செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தும் ‘Mr, Miss & Mrs Fashion World 2021’-ன் மாபெரும் இறுதிச்சுற்று, வரும் செப்டம்பர் 26ஆம் தேதி, பல்வேறு திரைப்பிரபலங்கள் முன்னிலையில், கோவாவில் நடுக்கடலில் வைத்து மெஜஸ்டிக் பிரைட் கப்பலில் நடைபெற உள்ளது.

 

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் அமலன், Mr, Miss & Mrs Fashion World 2021’ இறுதிப்போட்டியை கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடுக்கடலில் வைத்து, மெஜஸ்டிக் பிரைட் கப்பலில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டி’லா வாலண்டினா நிறுவனம் நடத்தும், இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைக்கும் நிதியை, கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்காகவும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவுகளில் நடைபெறும் இந்த மாபெரும் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், பிரபல தமிழ் நடிகைகளான ஓவியா, அபினயா உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, பிரபல ஆடை வடிவமைப்பாளர் லூசிலியா ஃபெர்னாண்டஸ், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன், ஃபேஷன் குயின் சினேகா நாயர், சையது சனாயுல்லா மற்றும் பிரபல மாடலும், மருத்துவருமான ஜெயா மகேஷ்  ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர்கள், பல்கேரியா, ஜார்ஜியா, துருக்கி மற்றும் துபாய் உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பை பெறுவர். மேலும், இந்தியாவில் கப்பல் பயணத்தில் இவ்வளவு பெரிய போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி, போட்டியைத் தொடர்ந்து கண்கவர் IFL ஃபேஷன் ஷோ நடைபெற உள்ளது.
Registration Link:
https://indianmediaworks.com/mr-miss-mrs-fashion-world-2021/
Previous Post

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ‘வினோ கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ’வை, ஜான் அமலன் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Post

Cheap & Best Mens Salon Brand inaugurated its 25th new salon outlet at Madippakkam

Next Post
Cheap & Best Mens Salon Brand inaugurated its 25th new salon outlet at Madippakkam

Cheap & Best Mens Salon Brand inaugurated its 25th new salon outlet at Madippakkam

Popular News

  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0
  • JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.