• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன்

by Tamil2daynews
September 28, 2021
in சினிமா செய்திகள்
0
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசன் !
விஜய் தேவரகொண்டா,   பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed )படத்தில் இணைகிறார் !
கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக  மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல்  பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.

அகிலம்  அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது  என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான்,  மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார்.

ஆம், நீங்கள் இப்பொழுது வாசித்தது சரி தான். மிகவும் ஆக்ரோஷம் மிக்க, உலக மக்களால் வசீகரிக்கப்பட்ட, வரலாற்று நாயகன் மைக் டைசன், LIGER படத்தில் இணைந்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். இந்த தீவிரமான ஆக்‌ஷன் கதை, அவரது வரவால் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மற்றும் இந்திய அளவில் மிகப்பிரமாண்டமான  பன்மொழி படமாக இப்படம் மாறியுள்ளது.

விஜய் தேவரகொண்டா டிவிட்டர் வாயிலாக  இது குறித்து கூறியது…

“நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்” .
இந்திய திரையுலகில் முதன்முறையாக, LIGER படத்தில் இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், MIKE TYSON. அவர்களை  இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.
#NamasteTYSON

LIGER  படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்கள் நடிக்கின்றனர்.  இன்னும் சில நாட்களுக்கு , உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். LIGER தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்

அதிரடியான, “இரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன்” சண்டை காட்சிகள், கோவாவில் தற்போது படமாகி கொண்டிருக்கிறது  என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் பன்மொழி திரைப்படமாகவும், உலகப்புகழ் நாயகன் மைக் டைசன் பங்கேற்கும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில்  பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Previous Post

யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

Next Post

தாமிரபரணி, #ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு.

Next Post
தாமிரபரணி, #ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு.

தாமிரபரணி, #ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு.

Popular News

  • ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.