• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல்

by Tamil2daynews
January 29, 2022
in சினிமா செய்திகள்
0
கொன்றுவிடவா – விமர்சனம்.
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Dulquer Salmaan turns singer for Hey Sinamika, sings a fun track for Brinda's film - Movies Newsஎண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் பாடலான ‘தோழி’ மிகவும் அழகாக உருவாகியுள்ளது.மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது.
பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில், “இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘தோழி’. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. பிரதீப் குமார் இப்பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார்,” என்றார்.பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறும்போது, “பனித்துளி போல தூய்மையான, அழகான நட்பின் பாடல் தான் ‘தோழி’. இதை கேட்பவர்கள் ஆழமான நட்பை அனுபவிக்க முடியும்,” என்றார்.ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

 

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன் ஐ எஸ் சி
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்
எழுத்து & பாடல்கள்: மதன் கார்க்கி
கலை இயக்கம்: எஸ் எஸ் மூர்த்தி / செந்தில் ராகவன்
சண்டை பயிற்சி: அஷோக்
நிர்வாக தயாரிப்பு: ஃபிராங்க் மைக்கேல்/ரஞ்சனி ரமேஷ்/எஸ் பிரேம்
இணை தயாரிப்பு: குளோபல் ஒன் ஸ்டூடியோஸ்
தயாரிப்பு: ஜியோ ஸ்டூடியோஸ்
இயக்கம்: பிருந்தா

 

Tags: Aditi Raobrinda masterdulquer salmanKajal Aggarwal
Previous Post

சீயான் விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Next Post

சினிமா டப்பிங் யூனியனில் நடிகர் ராதாரவி செய்த ஊழல்..!

Next Post
கொன்றுவிடவா – விமர்சனம்.

சினிமா டப்பிங் யூனியனில் நடிகர் ராதாரவி செய்த ஊழல்..!

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.