• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.

ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் “கலையரசி” ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர் – கோபி நயினார்
இசை – தேனிசைத் தென்றல் தேவா
ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்
படத்தொகுப்பு – ஆண்டனி
கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்
பாடல்கள் – யுகபாரதி
சண்டை பயிற்சி – கனல் கண்ணன்
நடனம் – பிருந்தா
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM
தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.
தயாரிப்பு மேற்பார்வை – KNR. சாமி
நிர்வாக தயாரிப்பு  – L.Srikanth

Previous Post

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

Next Post

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

Next Post

'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.