• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா-  விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

கதைக்கு முக்கியத்துவம் தரும்… தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பவர் பேட்டா’ எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்-  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.Imageஇயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான… பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து ‘பவர் பேட்டா’ ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க … ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.

கவர்ச்சிகரமான தலைப்பு – ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்… அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.

இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

நடிகர்கள் : சந்தீப் கிஷன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : கிருஷ்ண சைதன்யா

தயாரிப்பாளர்கள் : விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : 70 MM என்டர்டெய்ன்மண்ட்ஸ்

இசை : மனி ஷர்மா

ஒளிப்பதிவு : மதி

படத்தொகுப்பு  : ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு : ராமகிருஷ்ணா & மோனிகா

ஒளி வடிவமைப்பு : சச்சின் சுதாகரன் &ஹரிஹரன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Previous Post

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

Next Post

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

Next Post

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.