• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“தி லெஜண்ட்” விமர்சனம்

by Tamil2daynews
July 30, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“தி லெஜண்ட்” விமர்சனம்

 

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தன் வியாபாரத்தில் அடைந்த மாபெரும் வெற்றி அதன் விளம்பரப் படங்களில் தானே நடித்து புகழ் பெற்றதை தொடந்து சினிமாவிலும் ஏன் கதாநாயகனாக  நடிக்கக்கூடாது என தோன்றியதால், தன் ஆஸ்தான இரட்டை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி கொண்டு உருவாக்கி உள்ள படம் “தி லெஜண்ட்”

பான் இந்தியா என பல மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் உருவாகும் போதே சரவணன் அருள் அவர்களுக்கு ரஜினிகாந்த் மேல் உள்ள ஈர்ப்பா அல்லது 70 வயதிலும் இவர் ஜனரஞ்சக படங்களில் ஆடி, பாடி, சண்டை, காமெடி, இளம் நாயகிகளுடன் ஜோடி என அசததி வருகிறார் அதை மக்களும் ரசிக்கிறார்கள் நாம் ஏன் இதே போல முயற்சி செய்யக்கூடாது என்ற சிந்தனையின் விளைவு இப்படத்தில் சரவணன் அருளிடன் தெரிகிறது.
The Legend Movie Review: Saravanan vanity project is more a vibe than a film Harris Jayaraj JD Jerry- Cinema express

உலகப் புகழ்பெற்ற தமிழக விஞ்ஞானி டாக்டர் சரவணன் தனது கிராமத்தில் பள்ளிக்கூட நண்பராக இருந்து வந்த ரோபோ சங்கர் நீரிழிவு நோய் காரணமாக இறந்து விட, இதே போல் வேறு யாரும் நம் நாட்டில் இறக்கக் கூடாது என்பதற்காக நீரிழிவு நோய்க்கான புதிய மருந்து ஒன்றை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு எதிராக மருந்து மாஃபியா கும்பல் செய்யும் சதிகளை லெஜண்ட் சரவணன் எப்படி எதிர்க்கிறார் என்பது தான் தி லெஜண்ட் படத்தின் கதை.

பூஞ்சோலை கிராமத்தில் மருத்துவ கல்லூரி நடத்தி வரும் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக ஏகப்பட்ட ஆராய்ச்சிகளையும் செய்து உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு அப்படியே முரண்பாடாக சுமன் தப்பான மருந்துகளை கண்டுபிடித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த மருந்து மாஃபியா கும்பலை எப்படி அடித்து துவம்சம் செய்கிறார் லெஜண்ட் சரவணன் என்பதை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி பிரம்மாண்டமாக சொல்லி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராமத்து வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் வடஇந்திய ஹீரோயினான ஊர்வசி ரவுத்தேலா சற்றே முன் நோக்கி காண்பிக்கும் போது சரவணனின் கல்லூரியில் MPhil முடித்த லெக்சரராக வந்து பாடம் எடுக்கிறார். அவருக்கும் லெஜண்ட் சரவணனுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் எல்லாம் மிக சிறப்பு. ஊர்வசி ரவுத்தேலாவின் வீட்டை  கல்லூரி மாணவர்கள் எரித்து விட, அவர்களை அடித்து பிரிக்கும் லெஜண்ட் சரவணன், பின்னர் அறிவுரை பண்ணும் காட்சிகள் கைதட்டல் அள்ளுகின்றன.
The Legend trailer out: Saravanan is here to save the day- Cinema express

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ஜேடி ஜெர்ரி இயக்குநர்களின் பிரம்மாண்ட மேக்கிங், ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி, விவேக் நகைச்சுவை, யோகி பாபு சில இடங்களில் செய்யும் காமெடி, நல்ல மெசேஜ் உள்ளிட்ட பல பிளஸ்கள் உள்ளன. யாஷிகா ஆனந்த் உடன் ஆடும் மொசலு மொசலு பாடல் மற்றும் ராய் லக்‌ஷ்மியுடன் நடனமாடும் வாடி வாசல் வாடி பாடல்களும் மிக அருமையாக உள்ளன.

இளைய திலகம் பிரபு, நாசர், விஜயகுமார், லதா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, சுமன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலிலும் பெரு முயற்சி செய்து நடித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
The Legend' review: An absurd, campy Saravana Stores advertisement - The Hindu

நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் எல்லாமே அவரது நடிப்பில் நன்றாகவே தெரிகிறது.

இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி விஷுவலாக தங்களது விளம்பரப் படங்களை போலவே பிரம்மாண்டத்தை காட்டி உள்ளது.

 தி லெஜண்ட் திரைப்படம்.

“தி லெஜண்ட்” திரைப்படம் சரவணன் அருள் அவர்களுக்கு மிக பெரிய வெற்றி படமே.
                                     விமர்சகர்
                                    சரண்
PH:9994667873
Previous Post

நடிகர்,இயக்குநர் சரண் ராஜ் பார்வையில் “குப்பன்”..!

Next Post

தந்தையின் பிறந்தநாளை சிறப்பு குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா

Next Post

தந்தையின் பிறந்தநாளை சிறப்பு குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா

Popular News

  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.