• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

என்ன பேசினார் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு ..!

by Tamil2daynews
September 4, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
என்ன பேசினார் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு ..!
‘கணம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது

அருவி படத்தின் கதையை கேட்கும் போது திரையில் சிறப்பாக கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படி வந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது.

நான் முதலில் நடிகர் ஶ்ரீ தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடிப்பதற்க்காக தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதை விட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும். தெலுங்கு தமிழிலில் உள்ள ஒரு ஹீரோ நடித்தால் தான் இதை  பிஸ்னஸ் செய்ய முடியும் என்று நிலமையை நடிகர் ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக நீங்களே எடுங்கள் என்று கூறினார்.அவருக்கு இந்த இடத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
OTT & Theatrical are different avenues, says SR Prabhu | Tamil Movie News - Times of India

மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பி கொண்டே இருப்பேன். ஆனால், இந்த கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்த கதையைக் கூறுவதற்கு தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதை புரிந்து கொண்டு அந்த துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம் மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.

டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களும் ஒன்றாக பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறைய காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாக புரிந்து கொண்டு நடித்து கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி.

சமீபமாக எங்கள் நிறுவன படங்கள் ஓடிடியில் வெளியாவதால் இனிமேல் இப்படித்தான் இருக்குமா? என்று கேட்டார்கள். கொரோனா முடிந்து நிலமை மாறி, நல்ல படங்களை மக்கள் தியேட்டரில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இனி இப்படம் முதல் அனைத்தும் தியேடரில் தான் ரிலீஸ் ஆகும் என்று எஸ்.ஆர்.பிரபு பேசினார்.
Previous Post

பிரம்மாண்டமாக நடந்த சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” இசை விழா..!

Next Post

கணம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

கணம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.