• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ராவண கல்யாணம்’ தெலுங்கு பட படப்பிடிப்பு துவக்கம்..!

by Tamil2daynews
September 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ராவண கல்யாணம்’  தெலுங்கு பட படப்பிடிப்பு துவக்கம்..!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்தவகையில் அழகும் திறமையும் வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜார்ஜ் ரெட்டி, வங்கவீட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தீப் மாதவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் விவி விநாயக் கலந்துகொண்டு படத்தின் ஸ்கிரிப்டை அதன் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல படத்தின் முதல் ஷாட்டையும் அவர் இயக்கினார்

மேலும் தெலுங்கின் பிரபல கதாநாயகன் சத்யதேவ் கலந்துகொண்டு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார். அந்தவகையில் ராவண கல்யாணம் படத்தின் துவக்கவிழா திரையுலக நிகழ்வுகள் மிகவும் அருமையான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து விட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து முழுவீச்சில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜதி ரத்னாலு படத்திற்காக பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் சித்தம் மனோகர் இந்த படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தை ஜேவி மதுகிரண் என்பவர் இயக்குகிறார்.

ராவண கல்யாணம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய படமாக ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.ஏற்கனவே பான் இந்தியா படமாக உருவாகும் மைக்கேல் என்கிற படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்து வருகிறார் தீப்ஷிகா. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கூட முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தீப்ஷிகா தெலுங்கில் தனது முதல் படமாக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் காதல் கதை ஒன்றிலும் நடித்து முடித்துவிட்டார். பிரபல நடிகர் ரவிதேஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆர்டி டீம் ஒர்க்ஸ் மற்றும் பாசிட்டிவ் வைப் புரொடக்சன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Previous Post

இந்த படத்திற்கு 3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம். – நடிகர் ரஜினிகாந்த்

Next Post

இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி! – நடிகை திரிஷா

Next Post

இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி! - நடிகை திரிஷா

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.