இந்த ரவுடிப் பெண் மீண்டும் சினிமாவில்..!
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா ரெட்டி தனது நிகழ்ச்சியின் மூலம் வெகுவான ரசிகர்களை கவர்ந்து சினிமாக்காரர்களின் பார்வையும் அவர் மீது விழ வைத்தார்.
விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானார் இந்த ஸ்ரேயா ரெட்டி.
பொதுவா பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடும்னு தோணும் ஒரு சிலர பார்த்தா நல்ல ரசிகனும்னு தோணும் ஒரு சிலரை பார்த்தா ரவுடியா இருக்கும் போல இருக்குது அந்த பொண்ணு அப்படின்னு தோணும் இந்த மூன்றும் சேர்ந்து கலந்த கலவைதான் நடிகை ஸ்ரேயா ரெட்டி.பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.
சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.எப்பொழுதும் பார்க்க கொடூரமாக தோற்றம் உள்ளவர்களுக்கும் ஒரு ரவுடி போல் தோற்றமாக உள்ளவர்களுக்கும் மனது இளகிய மனதாக இருக்கும் என்பதில இந்த ஸ்ரேயா ரெட்டி மட்டும் விதிவிலக்கு அல்ல..









