• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்

by Tamil2daynews
August 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
புது மாப்பிள்ளையாக மாறிய  இளம் நட்சத்திர நடிகர்  கவின்

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில்  பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில்,  உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்படங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார்.  பின்னர் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.
Image
சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா”  திரைப்படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில்,  ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின்.  இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது.  இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

Previous Post

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!

Next Post

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

Next Post

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.