• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

by Tamil2daynews
August 5, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

 

செய்திப் பணிகளைத் தாண்டியும் சமூகப் பணியாற்றுவதை கடமையாக கொண்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, அத்தகைய சமூகப்பணியின் ஓர் அங்கமாக  கடந்த ஒன்பது ஆண்டுகளாக, 6 துறைகளில் சாதனை புரிந்துவரும் தமிழர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தமிழன் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில்  சாதனை புரிந்துவரும் ஆளுமைகளுக்கு தமிழன் விருதுகளும்,  அந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு  நம்பிக்கை நட்சத்திரம்  விருதுகளும்  என  இரு பிரிவுகளாக விருதுகள் வழங்கப்படுகின்றன
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘10ஆம் ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழா’ நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தமிழன் விருதுக்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று ஊடகவியலாளர்கள் முன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குநருமான சேரன் கலந்துகொண்டு இந்த புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் புதிய தலைமுறை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜாமணி, செய்தி இயக்குனர் ஸ்ரீநிவாசன், செய்தி பிரிவு செயல் ஆசிரியர் திருப்பதி, நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் மற்றும் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் பேசும்போது, “செய்திகளைக் கடந்து கலை, இலக்கியம், பொருளாதார நிகழ்வுகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒருசில முயற்சி தான் எங்களது இந்த முயற்சிகள். சாகித்ய அகாடமி விருது, பத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் தமிழன் விருது என்றால் இசைந்து இதில் பங்கேற்று எங்களை பெருமைப்படுத்தியதுடன் தங்களையும் மேன்மைப்படுத்திக் கொண்டார்கள்” என்று கூறினார்.
இயக்குனரும் நடிகருமான சேரன் பேசும்போது, “தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன்  விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களே, அதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன். அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன்.
நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு.. நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாது. அனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி. எப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள்” என்று கூறினார்.
வரும் ஆக-11ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள இந்த விழாவின் ஒரு பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்ட தொகுப்பாளினி தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருக்கும்.
Previous Post

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

Next Post

33 வருட திரையுலக அடையாளம்,தங்கர் பச்சான்

Next Post

33 வருட திரையுலக அடையாளம்,தங்கர் பச்சான்

Popular News

  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.