• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

by Tamil2daynews
August 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர்.
நிகழ்வில் இயக்குநர் முருகேஷ், “வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே ‘வான் மூன்று’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன். படத்தில் நடித்துள்ளவர்கள் டேட் இப்போது பிஸியாக உள்ளதால் அவர்களால் வர முடியவில்லை. நிச்சயம் அடுத்தடுத்த புரமோஷன்களில் கலந்து கொள்வார்கள்”.
நடிகை லீலா தாம்சன் பேசியதாவது, “இயக்குநர் இந்த கதை சொன்ன போது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக் கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது, “இந்தக் கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால், தைரியமாக ஒத்துக் கொண்டேன்” என்றார்.
எடிட்டர் அஜய் மனோஜ், “மூன்று பேருடைய கதை என்பதால் என் எடிட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ளவும் புதிதாக கற்றுக் கொள்ளவும்  நிறைய விஷயங்கள் இதில் இருந்தது”.

ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ், “இந்தக் கதை ஹாஸ்பிடலில் நடந்ததால், முழுக்க அங்குள்ள ஒளிகளை வைத்தே மேனேஜ் செய்தோம். அது பலருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி” என்றார்.

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ‘வான் மூன்று’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது.
Previous Post

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் – 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!

Next Post

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.