• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” டிரெய்லர் !!

by Tamil2daynews
August 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும்   “ஹர்காரா”  டிரெய்லர் !! 

 

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட்,  அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் “ஹர்காரா”.  இன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின் பல அஞ்சல் அலுவலர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தின் வழியே வெளியுட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இப்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் சொல்கிறது.

வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரெய்லர், காளி வெங்கட் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல்  இந்திய தபால் மனிதனின் கதையாக விரிகிறது. மிகப்புதுமையான முறையில் எடிட் செய்யப்பட்டிருக்கும் டிரெய்லரே ஒரு திரைக்கதை வடிவில் இருப்பது,  திரை ஆர்வலர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஆக்சன் அதிரடி திரில்லர் என எதுவுமில்லாமல் நம்மை, நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குள், இழுத்து செல்லும், மனதை இலகுவாக்கும் படைப்பாக காமெடி,காதல்  என அனைத்தும் நிறைந்த அம்சங்களுன் இப்படைப்பு உருவாகியுள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக  நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி  நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம்,  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றித்  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,  இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு,  ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

தொழில் நுட்ப குழு 
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்.
Previous Post

கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

Next Post

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

Next Post
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.