• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

2015 ல் செம்மரம் வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” RED SANDAL WOOD ” செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது.

by Tamil2daynews
August 27, 2023
in சினிமா செய்திகள்
0
காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை “
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

2015 ல் செம்மரம் வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” RED SANDAL WOOD ” செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது.

 

வெற்றி நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ” RED SANDAL WOOD ” செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது.

JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ” RED SANDAL WOOD ”
இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் , சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி
கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – குரு ராமானுஜம்.

படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் பகிர்ந்தவை….
இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை , படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார் . அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார் . அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி . அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் .

கடத்தல் காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள் ? என்கவுண்டர் செய்ய சொன்னது யார் ? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி . இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.

படபிடிப்பு ரேணிகுண்டா , தலக்கோணம் , தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.

படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் K.ரவி வெளியிடுகிறார்.

Previous Post

நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது!

Next Post

காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை “

Next Post
காதலின் அழகிய தருணங்களை பேசும் ” பரிவர்த்தனை “

காதலின் அழகிய தருணங்களை பேசும் " பரிவர்த்தனை "

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.