• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘பார்க்கிங்’ – விமர்சனம்

by Tamil2daynews
November 29, 2023
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘பார்க்கிங்’ – விமர்சனம்

 

பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோர் நடித்துள்ள படம் பார்க்கிங்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஷ் தயாரித்துள்ளனர்

சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அந்த வீட்டின் அடித்தளத்தில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங்.
Parking' trailer: Harish Kalyan, MS Bhaskar lock horns over parking spot - The Hindu

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் படத்திலேயே நான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். அற்புதமான காட்சி அமைப்புகளுடன், சிறந்த நடிகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர்  தான். ஓய்வு பெறப்போகும் ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.  எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படத்தின் மூலம் அவருக்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது.  நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறு எந்த நடிகரை நடிக்க வைத்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது எம் எஸ் பாஸ்கருக்கு ஒரு சபாஷ்.

சாக்லேட் பாய் போல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவரது மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.  குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.

பார்க்கிங் படத்தில் ஹீரோ வில்லன் என்ற ஒரு நிலையில் கதையை நகராமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை படம் பேசுகிறது. இதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.
Parking Movie Release on Sept 28th

வீடு அலுவலகம் என மொத்தமாக இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் கதை நகர்ந்தாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை.  தேவையில்லாத பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இல்லாமல் கதைக்கு தேவையானதை மட்டுமே வைத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங்கால் சிரமப்படும் பலருக்கும் இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும்.  கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பார்க்கிங்கால் இந்த அளவிற்கு பிரச்சனை ஏற்படுமா என்றும் யோசிக்க வைக்கும்.

அது மட்டுமல்லாமல் கொலை செய்கிற அளவுக்கு துணிவார்களா என்ற ஒரு சில கேள்விகளும் எழுகின்றன.

அறுபது வயதிற்கும் 28 வயதிற்கும் உள்ள வித்தியாசத்தை இருவேறாக பிரித்துக் காட்டிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த பார்க்கிங் திரைப்படம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வாழும் மக்கள் மனதில் நிச்சயமாக இப்படத்தை பார்க்கிங்  செய்யலாம்.
Tags: harish kalyan new movieharish kalyan parking movieparking harish kalyan movieparking harish kalyan movie tamilparking movie reviewparking movie tamilparking tamil movieSAM.CS
Previous Post

‘சூரகன்’ – விமர்சனம்

Next Post

திரைப்படமாகும் திருக்குறள், A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

Next Post
திரைப்படமாகும் திருக்குறள், A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

திரைப்படமாகும் திருக்குறள், A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.